Kathir News
Begin typing your search above and press return to search.

கொல்கத்தாவை போர்களமாக்கினார் மம்தா! தோல்வி பயத்தால் வெறியாட்டம்!

கொல்கத்தாவை போர்களமாக்கினார் மம்தா! தோல்வி பயத்தால் வெறியாட்டம்!

கொல்கத்தாவை போர்களமாக்கினார் மம்தா! தோல்வி பயத்தால் வெறியாட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 May 2019 7:44 AM GMT


மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகேயுள்ள, ஜாதவ்பூரில் பாஜக தலைவர் அமித்ஷா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். அமித்ஷா பொதுக்கூட்டம் நடத்தினால், தலைநகர் கொல்கத்தாவை சுற்றியுள்ள 6 தொகுதிகளும் பாஜக வசம் சென்றுவிடும் என்று மிரண்டுபோன மம்தா, அரசு நிர்வாகத்தில் உள்ள தனது எடுபிடி அதிகாரிகள் மூலம் அமித்ஷாவை தடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்,


அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதில் மற்றொரு உண்மை என்னவென்றால், பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. அந்த இடத்தின் உரிமையாளரையும் மம்தா மிரட்டி உள்ளார்.


உடனே அமித்ஷா, “பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தராவிட்டால் தெருத்தெருவாக சென்று மக்களை சந்திப்பேன்” என்று கொல்கத்தா நோக்கி புறப்பட்டார்.


கோல்கத்தா மாநகர வீதிகளில் அமித்ஷா நேற்று மாலை வலம் வந்தார். மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பொதுமக்கள் அமித்ஷாவின் வாகனத்தைத் தொடர்ந்து நடந்து வந்தனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி அமித்ஷா ஊர்வலமாக சென்றார்.





இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மம்தா தனது குண்டர்கள் மூலம் கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றினர். கொல்கத்தா பல்கலைக்கழகம் கலவரத்திற்கான களமாக மம்தா தேர்வு செய்து செயல்படுத்தினார். அமித்ஷாவின் வாகனம் இந்த பல்கலைக்கழத்தை கடந்தபோது மம்தாவின் குண்டர்கள் கலவரத்தை தொடங்கினர்.


இதையடுத்து பல இடங்களில் கலவரம் வெடித்தது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா கட் அவுட்டுகளை மம்தாவின் குண்டர்படை உடைத்து எறிந்தனர். தீவைப்பு சம்பவங்களும் அரங்கேற்றப்பட்டன. இதனால் கோல்கத்தா நகரமே போர்க்களமாக மாறியது.


மம்தாவின் பேயாட்டத்திற்கு முடிவுகட்டும் விதத்தில் பாஜகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து இருப்பதாக கல்கத்தா வாசிகள் தெரிவித்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News