Kathir News
Begin typing your search above and press return to search.

சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் மோடி! பன்னாட்டு ரேடார் நிபுணர்கள் கருத்து

சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் மோடி! பன்னாட்டு ரேடார் நிபுணர்கள் கருத்து

சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் மோடி! பன்னாட்டு ரேடார் நிபுணர்கள் கருத்து

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 May 2019 6:26 AM GMT



CRPF வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து News nation என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


மோடி கூறியதாவது: "விமானத் தாக்குதல் நாளில் வானிலை நன்றாக இல்லை. தாக்குதல் நாள் மாற்றப்பட வேண்டும் என்று நிபுணர்களின் மனதில் ஒரு குழப்பமான சிந்தனை இருந்தது. இருப்பினும், உண்மையிலேயே நமது விமானங்கள் ராடர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க மேகங்கள் உதவும் என நான் பரிந்துரைத்தேன். " என்றார்.


ஆனால் காங்கிரஸ் உட்பட மோடி எதிர்பார்ப்பாளர்கள் “ ரேடார் தொழில்நுட்பத்தால் மேகங்களைக் கடந்து பார்க்கமுடியாதா என்ன? நிச்சயம் பார்க்கமுடியும். சாதாரண ஒளி அலைகளை விட மிகவும் குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட ரேடியோ அலைகள் கொண்ட ரேடார்கள் இயக்கப்படுவதால் மேகங்கள் மேலே செல்லும் விமானங்களைக் கண்டறிய எந்த ஒரு தடங்கலும் இருக்காது. இந்த நிலையில் மோடி தான் கூறியதை அடுத்தே அன்றைக்கு தாக்குதல் நடந்ததாகக் கூறுவதா எனக் கூறி சமூக ஊடகங்களில் எதிர் கருத்தை பரப்பி வருகின்றனர்.


இந்த நிலையில் ‘ Firstpost report’ எனும் ஆங்கிலப் பத்திரிகை பன்னாட்டு நிபுணர்களின் கருத்துக்கள்படி ரேடார் செயல்படும் முழு தொழில் நுட்பத்தையும் கூறி பிரதமர் மோடி தவறாக எதையும் மதிப்பிட்டுவிடவில்லை என கூறியுள்ளது.


ரேடார் தொழில்நுட்பத்தின் ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா நுழைவுப்படி , "மழை மற்றும் அதிக பனிப் பொழிவு மங்கலான எதிரொலிப்புகளுக்கான சமிக்ஞைகளை ஏற்படுத்தும். துல்லியத்தை குறைக்கும் ". ரேடார் டுடோரியலின் ஒரு பதிவின் படி, ரேடார் அமைப்புகள் பரிமாற்ற அதிர்வெண்களின் கூட்டமைப்பாக வேலை செய்கின்றன. அதிக மழையால் அதிர்வெண் மட்டங்களில் ஏற்படும் வேறுபாடுகளால் ஒரு ரேடார் அமைப்பு மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு ராடார் அமைப்பு மிகவும் துல்லியமானது என்றால் கூட அது பரவும் அதிர்வெண் அளவை பொறுத்தே துல்லியத்தை காட்டும்.


கண்காணிப்பு ராடார் காற்று, மழை மற்றும் மேக மூட்டத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து துல்லியமாக செயல்பட முயற்சிக்கிறது. ரேடார்கள் எஸ் பேண்ட் (2-4 GHz) இல் இயங்குகிறது. ஆனால் மிக மோசமான வானிலை சூழ்நிலைகளில் துல்லியமான பார்வையை அது இழந்துவிடுகிறது. எனவே, பனிப்பொழிவு சூழ்நிலைகள் ரேடரின் செயல்திறனை மட்டும் பாதிக்காது, ரேடார் முறைமைகள் குறைந்த அதிர்வெண்களில் செயல்படுவதை கட்டாயப்படுத்தி, துல்லியமாக செயல்படுவதற்கான சூழ்நிலைகளை பலவீனப்படுத்தி விடுகின்றன.


பொதுமக்கள் பயன்படுத்தும் பயண விமானங்களின் விஷயத்தில், இரண்டாம்நிலை ரேடார், மேகங்களால் ஏற்படும் குழப்பத்தைத் தடுக்கப் பயன்படுகிறது. சம்பந்தப்பட்ட விமானங்களின் டிரான்ஸ்போர்டர்கள் அனுப்பிய சமிக்ஞைகளின் அடிப்படையில் இரண்டாம்நிலை ரேடார்கள் வேலை செய்கின்றன. ஆனால் இந்தியா நடத்திய விமானத் தாக்குதல்கள் ஒரு பிறருக்கு தெரியாமல் நடைபெற்ற ரகசிய பணியாகும்.


மேலும், பாகிஸ்தானிய வான்வெளியில் கடந்து செல்கின்ற IAF ஜெட் விமானங்கள் தனது டிரான்ஸ்பான்டர்களை முடக்கிவைத்து சென்றதால் இரண்டாம் நிலை ரேடார்களின் செயல்திறனை பாதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தானிய எல்லைக்குள் கடுமையாக ஐ.ஏ.எப் தாக்குதல் நடத்தியபோது உண்மையில் பாக்கிஸ்தான் ரேடார் நிலை மிகவும் குழப்பமானதாக இருந்தது. இது IAF Mirage 2000 ஜெட் விமானங்களைக் கண்டுபிடிப்பதில் பாகிஸ்தான் ராடார்களின் முழுமையான தோல்வியை தெளிவாகக் காட்டுகிறது. பாகிஸ்தான் ராடார்கள் பாதகமான வானிலை காரணமாக பாதிப்பிற்கு உட்படும் என்பதற்கு இது மேலும் சான்று ஆகும்.


பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி பாலகோட் விமானத் தாக்குதல்களுக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அப்போது வானிலை காரணமாக மிகவும் "இருட்டாக" இருந்தது. பாகிஸ்தானிய ரேடார்கள் வானிலை நிலைமைகளை அவசரமாக எதிர்கொள்வதில் சரியாக இல்லை என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. எனவே இது தொடர்பான ஆலோசனைகளை தெரிந்து கொண்டே பிரதமர் மோடி குழப்பமான நிலையில் சரியான முடிவை எடுத்து உதவியிருக்கலாம் என அப்பத்திரிக்கை பாராட்டியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News