Kathir News
Begin typing your search above and press return to search.

துடைப்பத்தை சுத்தமாக துடைத்து விட்டார்களாம் வாக்காளர்கள் ! அரிவாள் சுத்திக்கும் அதே கதிதானாம்: கருத்துக் கணிப்பில் வந்த பகீர் தகவல்கள்!!

துடைப்பத்தை சுத்தமாக துடைத்து விட்டார்களாம் வாக்காளர்கள் ! அரிவாள் சுத்திக்கும் அதே கதிதானாம்: கருத்துக் கணிப்பில் வந்த பகீர் தகவல்கள்!!

துடைப்பத்தை சுத்தமாக துடைத்து விட்டார்களாம் வாக்காளர்கள் ! அரிவாள் சுத்திக்கும் அதே கதிதானாம்: கருத்துக் கணிப்பில் வந்த பகீர் தகவல்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 May 2019 1:57 PM GMT


அகில இந்திய அளவில் நேற்று முன்தினம் பல ஊடகங்கள் வெளியிட்ட வாக்காளர்கள் கருத்துப்படி ஆம் ஆத்மி கட்சியும், இடதுசாரி கட்சிகளும் முற்றிலும் வாக்காளர்களால் முழுவதும் துடைக்கப்பட வாய்ப்புள்ளதாக பிரபல ஆங்கில மின்னூடக பத்திரிக்கை ' ரைட் லாக்' கூறியுள்ளது.


17 வது மக்களவையின் தேர்தலுக்கு பிந்தைய வாக்காளர் கருத்துக்களை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டன. இதில் 542 தொகுதிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் யாருக்கு என்பதற்கான தகவல்களை வெளியிட்டன. இதன்படி பாஜகவை மிகவும் விமரிசிக்கும் பத்திரிக்கையான NDTV அளித்த முடிவுகள்படி பாஜக கூட்டணி சராசரியாக 302 இடங்களை பெறும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களை பெரும் எனவும், மற்ற எதிர்கட்சிகள் 119 இடங்கள் வரை பெறக்கூடும் எனவும் கூறப்பட்டிருந்தது.


இதில் காங்கிரஸ் தனித்து 70-80 இடங்களை வெல்லலாம் என்றும், திருணாமுல் காங்கிரஸ் 25 இடங்கள் வரை வெல்லலாம் என்றும்,சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் சாட்சிகள் 20 இடங்கள் வரை பிடிக்கலாம் என்றும், மற்றபடி தெலுங்கானா ராஷ்டிர சமிதி , தெலுங்கு தேசம்,ஒய்.எஸ்.ஆர் , திமுக கட்சிகள் பெறப்போகும் இடங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மற்றும் இடது சாரிகள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2014 மக்களவை தேர்தலில் பஞ்சாபில் 4 இடங்களை பெற்றிருந்த ஆம் ஆத்மிக்கு இந்த முறை ஒரு தொகுதியில் வெற்றி பெறுவது கூட சந்தேகம் என தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் கேஜ்ரிவால் சரியான முறையில் அரசியல் ஆளுமை செய்ய தவறி விட்டார் என்றும், காங்கிரசுக்கு மாற்றாக மற்ற மாநிலங்களில் தனது தலைமைத்துவத்தை நிறுவுவதில் அவர் தோற்றுப் போனார் என்றும்,டெல்லி வாக்காளர்களையும் அவர் சொன்னபடி செய்யாமல் ஏமாற்றிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. கூட்டணி விஷயத்தில் ஆரம்பத்தில் வாய்ப்புகளை விட்டு விட்டு, பின் நாட்களில் அவர் தும்பியை பிடிக்க முயற்சிக்கும் சிறுவன்போல காங்கிரசின் நட்புக்கு வால் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


அதேபோல கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதை இந்த முடிவுகள் கூறுகின்றன. 2004,தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 35 இடங்களை வென்ற இடது சாரிகள் அதற்கடுத்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 16 இடங்களை பெற்றது. 2014 தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று மக்களின் நம்பிக்கையை வெகுவாக இழந்தது. இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெல்வது கடினம் என கூறப்படுகிறது.


கேரளாவிலும் 2014 தேர்தலில் 8 இடங்களை வென்ற அக்கட்சிக்கு 3 முதல் 5 இடங்களே கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெரும்பாலான மக்களுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பி விட்டது அங்கு அந்த கட்சிக்கு அதிக பட்ச இழப்பை அளிக்கும் என்று கூறப்படுகிறது.


கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்த தளமாக இருந்தது பீகார்தான் . இங்கு கம்யூனிஸ்டு மாணவர் தலைவர் கண்ணையா குமார் நட்சத்திர வேட்பாளராக களம் இறங்கினார். அவருக்காக இடது சாரி வாலிபர்களும், மாணவர்களும் தீவிரமாக வேலை பார்த்தனர். என்றாலும் அவர் ஓரளவு வாக்குகளை பெறலாம் . என்றாலும் வெற்றி பெறுவது கடினம் எனவும் கூறப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News