Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா..? அழகிரியை அலற விட்ட அறிக்கை..!

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா..? அழகிரியை அலற விட்ட அறிக்கை..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 May 2019 4:35 AM GMT


பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், மே 23ம் தேதிக்குள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் அந்த அறிக்கை அச்சிடப்பட்டிருந்தது.


அதில், தமிழக காங்கிரஸ் கட்சி யினரின் கவனத்திற்கு…வரும் 23ம் தேதிக்கு பின் தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ்விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர்சோனியாவுடன் நடைபெற்ற பேச்சில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது.விரைவில் காங்கிரஸ் தலைமை இதன் முழு விவரத்தையும் 23ம் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட அனைவருடனான பேச்சுக்கு பின் வெளியிடும்.ஸ்டாலின் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முதல்வர் சந்திரசேகர ராவுடனும் அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரனுடனும் இணைந்து முயற்சி செய்து வருகிறார்.எனவே இந்த முடிவை கனத்த இதயத்தோடு எடுத்துள்ளோம் என்பதை பத்திரிகையாளர்களுக்கும் கட்சி நிர்வாகிகள்தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கும்தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.


ஆனால் இந்த அறிக்கை போலியானது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உடனடியாக டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டது. “தலைவர் கே.எஸ்.அழகிரி பெயரில் போலியான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் கூறியிருந்தது.


அத்துடன், போலி அறிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News