Kathir News
Begin typing your search above and press return to search.

தங்கச்சிக்கு ‘நோ’ சொன்ன நிவேதா தாமஸ்.!

தங்கச்சிக்கு ‘நோ’ சொன்ன நிவேதா தாமஸ்.!

தங்கச்சிக்கு ‘நோ’ சொன்ன நிவேதா தாமஸ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 May 2019 5:50 AM GMT


சசிகுமார் நடித்த போராளி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின்னர் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தில் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ் அதே போன்று விஜய் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படத்தில் தங்கையாகவும் நடித்துள்ளார்.


அதன் பின்னர் தெலுங்கில் ‘ஜென்டில்மேன்’ படத்தில் அறிமுகமாகினார். அதன் பின்னர் ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ‘ஜெய் லவ குசா’ படத்திலும் நாயகியாகவும் நடித்தார்.


இந்நிலையில், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு தங்கையாக நடிக்க நிவேதா தாமஸிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.


மேலும், தனக்கு நாயகியாக மட்டுமே தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News