Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடாளுமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக ஒட்டு வித்தியாசத்தில் வென்றவர் இவர்தான்.!!

நாடாளுமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக ஒட்டு வித்தியாசத்தில் வென்றவர் இவர்தான்.!!

userBy : user

  |  25 May 2019 6:02 AM GMT


நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.அந்த வகையில் நாட்டிலேயே அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை, பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவருக்கு கிடைத்திருக்கிறது.


அவர் குஜராத் மாநிலம்,நவ்சாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.ஆர்.பாட்டீஸ் ஆவார்.இவர் பெட்ரா வாக்குகள் 9 லட்சத்து 72 ஆயிரத்து 739. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தரமேஷ்பாய் பீம்பாய் பட்டேலை 6 லட்சத்து 89 ஆயிரத்து 668 ஒட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். தரமேஷ்பாய் பீம்பாய் பட்டேல் பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 83 ஆயிரத்து 071 ஆகும்.


மேலும் 2 பா.ஜ.க வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. அதே வேளையில் உத்தர பிரதேச மாநிலம், மச்லிஷ்கர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் போலோ நாத், நாட்டிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் திருப்புவன் ராமை வெறும் 330 ஓட்டுக்களில் தோற்கடித்தார்.


Next Story