Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் இனி தடையற்ற மின்சாரம் ! தினமும் காற்றாலை, சூரிய சக்தி மூலம் 5 ஆயிரம் மெ.வா மின் உற்பத்தி !!

தமிழகத்தில் இனி தடையற்ற மின்சாரம் ! தினமும் காற்றாலை, சூரிய சக்தி மூலம் 5 ஆயிரம் மெ.வா மின் உற்பத்தி !!

userBy : user

  |  27 May 2019 10:52 AM GMT


தமிழகத்தில் பருவக்காற்று வீசிவருவதால் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படவுள்ளது.


இதன்மூலம் அனல் மின் உற்பத்தியை குறைத்து காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


பருவக்காற்று வீசத்தொடங்கியிருப்பதால் காற்றாலை மூலம் சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.


அதேபோன்று, சூரியசக்தி மூலமும் சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.


அந்தவகையில், காற்றாலைகளின் மின் உற்பத்தி காரணமாக மின்தேவை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது. தேவைக்கு அதிகமாகவுள்ள உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பதற்கும் மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.


கடந்த ஆண்டு இது 11 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக குறைந்தது. நடப்பாண்டு இம்மாத தொடக்கத்திலேயே உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால் 12 ஆயிரம் மில்லியன் யூனிட் என்ற அளவை தாண்டும் என எதிர்பார்க்கின்றோம்.


எனினும் தற்போது மாலை நேரத்தில்தான் காற்றின் வேகம் அதிகமாகவுள்ளது. எதிர்வருகின்ற நாட்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.


அந்தவகையில் தேசிய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திலுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம்,உடுமலை, கயத்தாறு மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் 8,152 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் இயங்கிவருகின்றன.


காற்றாலை மின் உற்பத்தி முழு அளவை எட்டும்போது அனல் மின்நிலையங்களை பராமரிப்பு பணிக்காக சுழற்சி முறையில் நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Next Story