Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்? சுவாரஸ்யமாக நடந்த நிகழ்வு!

கர்நாடகத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்? சுவாரஸ்யமாக நடந்த நிகழ்வு!

userBy : user

  |  28 May 2019 6:59 AM GMT


ராஜஸ்தான் மாநில மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.


ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில், அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.


அதிலும் முக்கியமாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவினார்.


இதனால் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 121 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் மீது, ஐந்தே மாதங்களில் ராஜஸ்தான் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்பது தெரிய வந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும், ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடிகள் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது .


Next Story