Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.கவில்தான் அதிகமாக எஸ்.சி / எஸ்.டி எம்பிகள் உள்ளனர்! பா.ஜ.க தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற பொய்யுரைகளை தூள் தூள் ஆக்கிய 2019 தேர்தல்!

பா.ஜ.கவில்தான் அதிகமாக எஸ்.சி / எஸ்.டி எம்பிகள் உள்ளனர்!  பா.ஜ.க தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற பொய்யுரைகளை தூள் தூள் ஆக்கிய 2019 தேர்தல்!

userBy : user

  |  29 May 2019 11:51 AM GMT



பாஜகவை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல திருமாவளவன் போன்றவர்கள், தொடர்ந்து திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் தலித் மக்களை தங்களின் சுய வளச்சிக்காக மட்டுமே, திருமாவளவன் போன்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக ஒருபிடி மண்ணைகூட வாரி போடவில்லை என்பதுதான் உண்மை. இதுமட்டுமல்ல, நரேந்திர மோடி அரசு இந்த மக்களுக்காக கொண்டு வந்துள்ள ஏராளமான திட்டங்களை அவர்மீது கொண்ட வெறுப்பு அரசியல் காரணமாக அந்த அப்பாவி மக்களுக்கு சென்றடையாமல் தடுத்துள்ளனர் என்பது மற்றொரு அதிர்ச்சித் தகவல்.
எந்த பாஜகவை, தலித்துகளுக்கு எதிரான கட்சி என்று பிரச்சாரம் செய்கிறார்களோ அந்த பாஜகதான் தலித் ஒருவரை நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதியாக தேர்வு செய்துள்ளது. ஆமாம், தலித் சமுதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியது பாஜகதான். இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பலைஜாதியினர், பழங்குடியினர் போன்ற அனைத்து மக்களையும் சமமாக நடத்துகிறது பாஜக என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
இதுபோல பாரதிய ஜனதா கட்சியில்தான் அதிகமான தலித் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளனர். 2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூலம் 67 எஸ்சி - எஸ்டி எம்பிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் அந்ததேர்தலில் எஸ்சி - எஸ்டி மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு 12 பேர் மட்டுமே எஸ்சி - எஸ்டி எம்பிகள் இருந்தனர்.
இந்த முறை (2019) நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எஸ்சி - எஸ்டி பிரிவைச் சேர்ந்த 77 எம்பிகள் பாஜக மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 46 எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள். 31 பேர் எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால் காங்கிரஸில் வெறும் 9 பேர் மட்டுமே எஸ்சி - எஸ்டி பிரிவை சேர்ந்த எம்பிகள் உள்ளனர்
இதன்மூலம் நாம் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நாடுமுழுவதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைஜாதியினர், பழங்குடிஇனத்தவர் போன்ற அடித்தட்டு மக்கள் அனைவரும் பாஜகவின் பக்கம் சாய்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடி அரசின் திட்டங்கள்தான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைஜாதியினர், பழங்குடியினத்தவர் போன்ற மக்களுக்கு அந்த திட்டத்தின் பலன்கள் போய் சேர்ந்திருக்கிறது. அவர்கள் அந்த தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இது வெளிப்படையான உண்மை.
கடந்த 2014, பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 282 எம்பிக்கள் இருந்தார்கள். இந்தமுறை (2019) அது 302 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 21 எம்பிகள் அதிகமாக கிடைத்துள்ளனர். இந்த 21 எம்பிக்களில் 10 எம்பிக்கள் எஸ்சி - எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள். அதாவது கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைவிட இந்தமுறை கூடுதலாக வெற்றிபெற்ற 21 எம்பிகளில் ஏறக்குறைய சரிபாதி எம்பிகள் எஸ்சி - எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள்.
இதுதவிர மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் போன்ற பல மாநிலங்களில் எஸ்சி - எஸ்சி பிரிவை சேர்ந்த அனைத்து எம்பிக்களுமே பாஜகவை சேர்ந்தவர்கள்தான். அதாவது இந்த மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைஜாதியினர், பழங்குடியினர் போன்ற மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்குதான் வாக்களித்துள்ளனர் என்பது திருமாவளவன் போன்ற தலித் மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
2009 - ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது பாஜகவிற்கு வாக்களித்த எஸ்சிகளின் சதவீதம் 7.03 ஆக இருந்தது. அது 2014 பாராளுமன்ற தேர்தலில் 17.7 சதவீதமாக உயர்ந்தது. இது 2019 பாராளுமன்ற தேர்தலில் 34.27 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுபோல பாஜவிற்கு வாக்களித்த எஸ்டி பிரிவு மக்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது. 2009 - பாராளுமன்ற தேர்தலில் 28.83 சதவீதமாக இருந்த எஸ்டி பிரிவு மக்களின் எண்ணிக்கை 2014 - ஆண்டு தேர்தலில் 38.18 சதவீதமாக உயர்ந்தது. இது 2019 - பாராளுமன்ற தேர்தலில் 42.16 சதவீதமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பட்டியலின மக்களை தங்களின் சுய லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்திவரும் திருமாவளவன் போன்றோரின் முகத்திரைகள் விரைவில் கிழியும். அப்போது தமிழகத்திலுள்ள பட்டியலின மக்களின் வாழ்க்கையும் மேம்படும்.


Next Story