Top
undefined
Begin typing your search above and press return to search.

மகாத்மா காந்தி , வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி முதல் மரியாதை!! இன்று மீண்டும் பிரதமராகிறார் !!

மகாத்மா காந்தி , வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி முதல் மரியாதை!!  இன்று மீண்டும் பிரதமராகிறார் !!

userBy : user

  |  30 May 2019 5:15 AM GMT



நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்து உள்ளார். இன்று பதவி ஏற்கிறார் அதை ஏற்று மோடி இன்று வியாழக்கிழமை மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.


Next Story