Kathir News
Begin typing your search above and press return to search.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை செய்திகளை மறைக்க தான் #Pray_For_Nesamani ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்கின்றனரா பத்திரிகையாளர்கள் ? : நெட்டிசன்கள் கேள்வி

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை செய்திகளை மறைக்க தான் #Pray_For_Nesamani ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்கின்றனரா பத்திரிகையாளர்கள் ? : நெட்டிசன்கள் கேள்வி

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை செய்திகளை மறைக்க தான் #Pray_For_Nesamani ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்கின்றனரா பத்திரிகையாளர்கள் ? : நெட்டிசன்கள் கேள்வி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 May 2019 6:51 AM GMT


#Pray_For_Nesamani எனும் ஹேஷ்டேக் நேற்றிலிருந்து (மே.29) இந்தியளவில் டிரெண்டிங் ஆக, பலரும், ‘யாருப்பா அந்தே நேசமணி? அவருக்கு என்னாச்சு?’ என்று அக்கறையாக விசாரிக்க, பிரெண்ட்ஸ் படத்தின் வடிவேலு காமெடியை சொன்னபிறகு, ‘அடப்பாவிகளா இவிங்களுக்கு வேற வேலையே இல்லையா?’ என்று சலித்துக் கொண்டனர்.


தமிழக இளைஞர்கள் இவ்வளவு வெட்டியாகவா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தாலும், ட்விட்டர் பக்கமே பெரும்பாலும் தலை காட்டாத சில பத்திரிகையாளர்கள் எல்லாம் வேலை வெட்டியை விட்டுவிட்டு இந்த ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், எஸ்.ஆர்.எம் தற்கொலை செய்திகளை மறைக்க தான் தமிழக பத்திரிகையாளர்கள் இவ்வாறு இந்த ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்கின்றனர் என்ற பதிவும் ட்விட்டரில உலா வருகிறது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை குறித்து செய்தி வெளியிடாத ஊடகத்தில் பணி புரியும் பத்திரிகையாளர்களும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை குறித்து ஒரு பதிவு கூட பதிவிடாத ஊடகவியலாளர்களும் தான் இந்த ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பதை உன்னிப்பாக பார்க்க முடிகிறது.




https://twitter.com/RKRadhakrishn/status/1133909545477001216?s=19




https://twitter.com/dhanyarajendran/status/1133937087198031872?s=19




https://twitter.com/karthickselvaa/status/1133800139783413761?s=19




https://twitter.com/imanojprabakar/status/1133961554146185216?s=19




https://twitter.com/PTTVOnlineNews/status/1133954987199877121?s=19




https://twitter.com/IamSellvah/status/1133941145438834689?s=19


இதில் சுவாரசியம் என்னவென்றால், தொலைக்காட்சி சேனல்களின் பெயரில் வெளியிடப்பட்ட போலி காணொளியை அதே தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் பகிர்ந்தது தான். வெறும் பொழுதுபோக்கிற்காகவா தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு பத்திரிகையாளர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் என்ற கேள்வி சாதாரணமாக எழுகிறது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை நடத்துபவரும் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி குழுமத்தை நடத்துபவரும் ஒருவர் தான் என்பதையும் அவர் தி.மு.க சார்பில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த நிலையில், ட்விட்டர் வாசிகள் இந்த ட்ரெண்டிங் மீது தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பதிவிட்டு வருகின்றனர்.




https://twitter.com/Hariindic/status/1133944565172326400?s=19




https://twitter.com/fireboltt/status/1133980564942254081?s=19




https://twitter.com/dearrathish/status/1133940625127198724?s=19




https://twitter.com/Rineshraja/status/1133968252558667778?s=19




https://twitter.com/maithriim/status/1133958460213669888?s=19




https://twitter.com/skarthikdotin/status/1133953187264602113?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News