Top
undefined
Begin typing your search above and press return to search.

அமித்ஷா, உள்துறை அமைச்சர் ஆனார்! மம்தா, ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி!!

அமித்ஷா, உள்துறை அமைச்சர் ஆனார்! மம்தா, ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி!!

userBy : user

  |  31 May 2019 9:38 AM GMT



நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று பிரமராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து 57 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முதல்முறையாக பாஜக தலைவர் அமித்ஷாவும் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.


மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களுக்கு இன்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அமித்ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


பாஜக தேசிய தலைவராக அமித்ஷா 2014 - இல் தேர்வு செய்யப்பட்டபோதே எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்தன. எதிர்கட்சியினர் பயந்ததுபோலவே, அவர் பாஜக தேசியத் தலைவராக ஆனபிறகு பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலைவிட நடந்து முடிந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பலம் கூடியது. கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. அந்த அளவிற்கு அமித்ஷாவின் செயல்பாடுகள் இருந்தன.


இந்த நிலையில்தான் அமித்ஷா, உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இது பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதைவிட, எதிர்க்கட்சித் தலைவர்களை மீண்டும் ஒருமுறை அதிர்சியடைய செய்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதல் தமிழக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வரை அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.


தேர்தல் பிரசாரத்தின்போதே, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆகிவிடுவார் என்று திமுக கூட்டணியினர் தங்களின் பீதியை வெளிப்படுத்தினர். காரணம், பிரதமருக்கு அடுத்த நிலையில் அதிக முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் வாய்ந்த அமைச்சர் பொறுப்பாகும்.


மாநில மற்றும் மத்திய அரசின் உள்நிர்வாகம் சார்ந்த விவகாரங்களை கவனித்தல், அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தல், நாட்டின் அனைத்து சட்ட ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்தல், அனைத்து குடியுரிமை மற்றும் இயற்கை பண்புகளை கொண்ட மக்கள்தொகை கணக்கெடுத்தல், தேசிய கீதம், தேசியக் கொடி, மொழிகள் இவைகளை காத்தல், அரசியலமைப்பு சட்டத்தின்படி இதன் அடிப்படை செயல்பாடுகளான குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மற்றும் ஏனைய அமைச்சர்களின் சுற்றறிக்கைகள், நியமனங்கள், பொறுப்பு விலகல்கள் அல்லது விலக்கல்கள், ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் நியமனம் மற்றும் விலக்கல்கள் போன்ற செயல்பாடுகள் இத்துறை அமைச்சரால் கவனிக்கப்படுகிறது.


இதற்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், மிக மென்மையான போக்கையே கடைபிடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அமித்ஷாவின் செயல்பாடு அப்படி இருக்காது. பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக இருக்கும்.


காஷ்மீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். தனி அந்தஸ்து வழங்கும் 370 - வது சட்டப்பிரிவு நீக்கப்படும். தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள். குண்டு வைப்பு கோஷ்டிகள் நாட்டைவிட்டே வெளியேறிவிடுவார்கள். தேசவிரோத செயல்களில் ஈடுபடும் அந்நியநாட்டு கைக்கூலிகள் களையெடுக்கப்படுவார்கள். வெளிநாடுகளில் நிதியுதவி பெற்று இங்கு போராட்டத்தைத் தூண்டும் கும்பல்களுக்கு இனி கேடு காலம்தான்.


மொத்தத்தில் மோடி ஆட்சியில் நேர்மையாக வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சிதான்!
தேசதுரோகிகளுக்கும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கும், ஊழல்வாதிகளுக்கும் சங்குதான்!


Next Story