Kathir News
Begin typing your search above and press return to search.

சாமானியரை மத்திய அமைச்சராக்கினார், நரேந்திர மோடி! பாஜகவில் மட்டுமே இது சாத்தியம்!!

சாமானியரை மத்திய அமைச்சராக்கினார், நரேந்திர மோடி! பாஜகவில் மட்டுமே இது சாத்தியம்!!

சாமானியரை மத்திய அமைச்சராக்கினார், நரேந்திர மோடி! பாஜகவில் மட்டுமே இது சாத்தியம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 May 2019 12:26 PM GMT



குடிசையில் வசிக்கும் ஒருவர், சைக்கிளில் பயணம் செய்யும் ஒருவர், தொடர்ந்து மக்கள் தொண்டாற்றி வரும் ஒருவர், தன்னை எதிர்த்துபோட்டியிட்ட இருபெரும் கோடீஸ்வர்களை தோற்கடித்த ஒருவர் நரேந்திர மோடி அமைசரவையில், சிறு, குறுந்தொழில்துறை மேம்பாட்டு இணை அமைச்சராக இணைத்து அழகு பார்த்துள்ளார், பிரதமர் நரேந்திரமோடி.


ஒடிசாவைச் சேர்ந்த அந்த எளிய மனிதரின் பெயர் பிரதாப் சந்திர சாரங்கி.





மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்.


ஏழையான இவர், 1975 - ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்ட இவர், ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து ஏழை-எளியவர்களுக்கு தேவையான சமுதாய பணிகளை செய்து வந்தார்.


துறவியாக விரும்பிய இவர், கல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கிருந்தவர்கள், வயதான விதவை தாயை கவனிக்குமாறு சொல்லி திரும்பி அனுப்பிவிட்டனர். இதனால் அவர் ஒடிசா திரும்பினார். மண்சுவர் கொண்ட குடிசையில் வாழ்ந்து வரும் இவர், மிகவும் எளிமையாகவே வாழ்ந்து வருகிறார்.





தனது குடிசை வீட்டுக்கு முன்பு தெருவோர அடிபம்பில்தான் குளிக்கிறார். மலைவாழ் மக்களுக்காக பலாசூர், மயூர்கஞ்ச் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்களை தொடங்கி உள்ளார்.


ஏழ்மை, சேவை மற்றும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாக இவரை ஒடிசா மாநில மக்கள் “ஒடிசாவின் மோடி” என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர் 2004 முதல் 2009 வரையும், 2009 முதல் 2014 - ஆம் ஆண்டு வரையும் நிலகிரி சட்டசபை தொகுதியில் இருந்து தேர்வாகி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.


சொந்தமாக கார்கூட இல்லாத இவர், தேர்தல் பிரசாரத்துக்கு பெரும்பாலும் சைக்கிளிலேயே சென்று வந்தார். அதிகபட்சமாக ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்துள்ளார். அதுவும் இவர்மீது இரக்கம் கொண்ட ஆர்எஸ்எஸ். இயக்கம், இவரது தேர்தல் பிரசாரத்துக்கு ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தது. மற்றபடி வேறுயாரிடமும் இவர் எந்த உதவியையும் பெறவில்லை.


ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஒடியா ஆகிய 4 மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றல் பெற்றவர் இவர்.


இவருக்கு சொந்தமாக வாகனங்கள், வீடுகள், நிலங்கள் என்று எதுவும் கிடையாது. மூதாதையர்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை இவர் பயிரிட்டு அனுபவித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.


ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு வந்த அவர் வழக்கம்போல தனது ஜோல்ணா பையுடன்தான் வந்திருந்தார். அவர் எளிமையை கண்டு மற்ற தலைவர்களும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டு போனார்கள். அவரது டெல்லி பயண காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


அவர் மத்திய அமைச்சர் ஆனபோதும் புதிய உடைக்கு மாறவில்லை. தனது எளிமையான உடையிலேயே வந்து பதவி ஏற்றார். அதனால்தான் அவர் பதவி ஏற்க வந்தபோது வாழ்த்து கோ‌ஷமும், கரகோ‌ஷமும் அதிகமாக இருந்தது. அவர் பதவி ஏற்று முடித்ததும், மற்ற சக அமைச்சர்கள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.


இவரிடம் தோற்வர், காங்கிரஸ் வேட்பாளர் நபஜோதி பட்நாயக். மிகப்பெரிய கோடீஸ்வரர். இவர் ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சித்தப்பா, கனக் டி.வி., சம்பாத் பத்திரிகை பத்திரிகை என்னும் பிரபல செய்தி நிறுவனமான ஈஸ்டர்ன் மீடியா நெட்வொர்க்கின் உரிமையாளர் ரஞ்சன் பட்நாயக் ஆவார். மற்றொரு வேட்பாளரான பிஜூ ஜனதா தளத்தின் ரபீந்திரகுமார் ஜென, நியூஸ் வேர்ல்டு ஒரிஸ்ஸா என்னும் செய்தி தொலைக்காட்சியின் அதிபர்.


2 மிகப்பெரிய சாம்பவான்களை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய எளிமையும், நேர்மையும் கொண்ட, பிரதாப் சந்திர சாரங்கியைத்தான் பிரதமர் நரேந்திரமோடி, தனது அமைச்சரவையில் இணைத்து அழகு பார்த்துள்ளார்.


சாமானியர்களும் உயர்ந்த பதவியில் அமர்வது பாஜகவில் மட்டுமே சாத்தியம் என்பதுதே இன்றைய யதார்த்தம். திமுக போன்ற கட்சிகளில் இதெல்லாம் கனவில்கூட நடக்காத ஒன்று.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News