Kathir News
Begin typing your search above and press return to search.

வசந்தகுமாருக்கு ஏன் சீட் கொடுத்தார்கள்? காங்கிரசில் சாமானியர்களுக்கு இடமில்லை! - விஜயதரணி ஆவேசம்!!

வசந்தகுமாருக்கு ஏன் சீட் கொடுத்தார்கள்? காங்கிரசில் சாமானியர்களுக்கு இடமில்லை! - விஜயதரணி ஆவேசம்!!

வசந்தகுமாருக்கு ஏன் சீட் கொடுத்தார்கள்? காங்கிரசில் சாமானியர்களுக்கு இடமில்லை! - விஜயதரணி ஆவேசம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 May 2019 10:43 AM GMT



கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் எனக்கு சீட் தராமல் வெளியிலிருந்து வந்த வசந்தகுமாருக்கு ஏன் சீட் கொடுத்தார்கள்? காங்கிரசில் சாமானியர்களுக்கு இடமில்லை என்று விஜயதரணி ஆவேசமாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: -


தமிழக காங்கிரஸ் கட்சியில் சீட் கொடுத்தது எல்லாமே மூத்த தலைவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும்தான். 72, 75 வயதான சீனியர்கள் எல்லாம் ராகுல் காந்தியை மிரட்டி சீட்டு வாங்கினார்கள். அவர்களுக்கு இல்லைஎன்றால் அவர்களின் மகன்களுக்கு சீட் வாங்கினார்கள்.


சீனியர்களும், அவர்களின் பிள்ளைகளும்தான், தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். சாமானியர்களுக்கு காங்கிரசில் எங்கே இடமிருக்கிறது? தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் காங்கிரஸ் சரியாக இருக்கிறது என்று அர்த்தமா? பெண்களுக்கு எங்கே இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்? தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. அதில் ஒரே ஒரு சீட்டுதான் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அட்லீஸ்ட் 3 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டுமே? ஏன் வழங்கப்படவில்லை? பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை சொன்னதே எங்களின் தலைவர் ராகுல் காந்திதானே? எங்களின் காங்கிரஸ் கட்சியிலேயெ அதற்கு வழியில்லாமல் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் செய்து விட்டார்கள் அல்லவா?


சிட்டிங் எம்எல்ஏ ஆக இருக்கக்கூடிய வசந்தகுமாருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறார். ஏன் எனக்கு அந்த வாய்ப்பை தந்தாலென்ன? ஏன் தரவில்லை? நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக் கூடியவள். வசந்தகுமாருக்கு 72 வயது ஆகிவிட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுருந்து வந்து போட்டியிடுகிறார். அவருக்கு சீட் கொடுத்து இருக்கிறார்கள்.


இதெல்லாம் சீனியர்களின் தொந்தரவு இல்லையா? என்னுடைய விஷயத்திலேயே இப்படி நடந்திருக்கிறதே? தமிழ்நாட்டில் மட்டும் என்ன கெட்டுப்போகிறது? இங்கேயும் அதேதான் கூத்துதான். இங்கேயும் அதே தான் பிரச்சனைதான். சீனியர்கள் எல்லாம் உட்கார்ந்துகொண்டு, தனக்கு சீட் வேண்டும் அல்லது தனது பிள்ளைக்கு வேண்டும் என்பதில் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைமையை மிரட்டித்தான் இந்த சீட்டை எல்லாம் வாங்குகிறார்கள். இது உண்மைதான். ராகுல் காந்தி சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான். உண்மைதான்.


ராகுல் காந்தி, இப்போது ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் சீனியர்களின் சொந்தரவுகள்தான். தமிழகத்தை போன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியில் தொந்தரவுகள் இருக்கின்றன. அதனால்தான் அவர் அந்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.


இவ்வாறு விஜயதரணி கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News