Top
undefined
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை! வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஒய்வூதியம்! மோடி அரசின் ஆரம்பமே அமர்களம்!

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை! வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஒய்வூதியம்! மோடி அரசின் ஆரம்பமே அமர்களம்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 Jun 2019 5:22 AM GMT


சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்து இருந்தார்.


இந்த நிலையில் கூடிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்கான அறிவிப்பும் வெளிடப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியது:-


இத்திட்டத்திற்காக ரூ. 87ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 14. 9 கோடி விவசாய குடும்பத்தினர் பயனடைவார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோல, 60 வயதிற்கு மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.


இதன்படி ஆண்டுக்கு 1.5 கோடிக்கு குறைவாக ஜி.எஸ்.டி செலுத்தும் சிறு வியாபாரிகள் இந்த ஓய்வு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் பயன்பெற விரும்பும் வியாபாரிகள், பொது விநியோக திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நரேந்திர மோடி 2 - வது முறை பதவி ஏற்ற உடனேயே அதிரடி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. வரும் நாட்களில் புதிய புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் எதிர்பார்க்கலாம்.


Next Story