Kathir News
Begin typing your search above and press return to search.

முஸ்லீம் நபர் தொப்பியும் கழட்டவில்லை, சட்டையும் கிழிக்கப்படவில்லை - ஊடகங்களின் வதந்தி வெறிக்கு இரையான பா.ஜ.க : வெளியான உண்மை நிலவரம்.!

முஸ்லீம் நபர் தொப்பியும் கழட்டவில்லை, சட்டையும் கிழிக்கப்படவில்லை - ஊடகங்களின் வதந்தி வெறிக்கு இரையான பா.ஜ.க : வெளியான உண்மை நிலவரம்.!

முஸ்லீம் நபர் தொப்பியும் கழட்டவில்லை, சட்டையும் கிழிக்கப்படவில்லை - ஊடகங்களின் வதந்தி வெறிக்கு இரையான பா.ஜ.க : வெளியான உண்மை நிலவரம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Jun 2019 11:14 AM GMT


ஹரியானா மாநிலம், குருகிராமில் குல்லா அணிந்திருந்த முஸ்லிம் இளைஞரை குல்லாவை நீக்கக் கோரி அடையாளம் தெரியாத சிலர் அடித்து உதைத்ததாக பரவி வரும் தகவல் குறித்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில், அது பாஜகவிற்கு எதிராக பரப்பப்பட்ட போலி செய்தி என்பது தெரிய வந்துள்ளது.


இது குறித்து பிரபல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது பர்கர் அலி(வயது25). இவர் குர்கிராமில் உள்ள ஜேக்கப் புரா பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள சர்தார் பஜாரில் தையற்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு திடீரென அடையாளம் தெரியாத 4 பேர் ஆலம் கடைக்குள் புகுந்து, தலையில் அணிந்திருந்த குல்லாவை கழற்ற வலியுறுத்தினார்கள்.


அதற்கு அலி மறுக்கவே அவரை அடித்து உதைத்த அந்த கும்பல், அவரை பாரத்மாத்தா கிஜே என்று வாசகத்தையும், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தையும் கூற கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு அலி மறுக்கவே அவரை அடித்து உதைத்து அந்த கும்பல் தப்பிவிட்டது' என்று அதில் கூறப்பட்டிருந்தது.


The wire, NDTV, Deccan Chronicle, NDTV, India Today, Scroll.in ஆகிய ஊடகங்களில் சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் மட்டுமே செய்திகள் வெளியாகி இருந்தனர்.


சமூக வலைதள பதிவுகள்:
















சமூக வலைதளங்களில் வெளியான வதந்தி ஊடகங்களிலும் வெளியானதால் அதனை உண்மை என நம்பி பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தனர்.


உண்மையில் நடந்தது என்ன..?


இதுகுறித்து குருகிராம் போலீஸ் துணை ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், " ஆலம் அளித்த புகாரைப் பெற்றுள்ளோம். முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு, ஐபிசி பிரிவு 153, 147, 149, 323,506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம், விரைவில் அந்த நபர்களை கைது செய்வோம்' என்று கூறினார்.


அதன்படி 24 மணி நேரத்திற்குள் அப்பகுதியில் உள்ள 50 CCTV கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் பர்கர் அலியின் குல்லா எந்த இடத்திலும் தூக்கி எறியப்படவில்லை. அவரது சட்டையும் கிழிக்கப்படவில்லை. கிழே விழும் குல்லாவை பர்கர் அலியே கையில் எடுத்து பாக்கெட்டில் வைக்கும் காட்சி தெளிவாக பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் பாரத்மாத்தா கிஜே என்று வாசகத்தையும், ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தையும் கூற சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டத்திற்கான எந்த வித சத்தியக்கூறும் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


அதே போல பாதிக்கப்பட்ட பர்கர் அலி காவல்துறையில் எழுத்து மூலமாக கொடுத்த புகாரில், எந்த இடத்திலும் தான் கோஷம் எழுப்ப சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பிட வில்லை.


இறுதியாக:


இந்த சம்பவத்தில் தனிப்பட்ட மோதல் தான் நடந்துள்ளதே தவிர, ஊடகங்கள் கூறுவதற்கும், காவல் துறையினர் கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எந்த இடத்திலும் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News