Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க கட்டுக்குள் வந்த மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் - திரிணாமூல் காங்கிரசுக்கு மரண பயத்தை கண்முன் காட்டிய முடிவுகள்.!

பா.ஜ.க கட்டுக்குள் வந்த மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் - திரிணாமூல் காங்கிரசுக்கு மரண பயத்தை கண்முன்  காட்டிய முடிவுகள்.!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 Jun 2019 2:44 PM GMT


மேற்குவங்க மாநிலத்தில் பாட்பரா (bhatpara) பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக 18 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.


மேற்குவங்க மாநிலத்தில் பாட்பரா (bhatpara) பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 26 இடங்களில் பாஜக 18 வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அதைவிட பல மடங்கு அதிக இடங்களை கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை கலங்கடித்துள்ளது.


முதலில் போட்டியிட்ட 26 இடங்களிலும் முன்னிலையில் இருந்ததால் திரிணாமூல் மொத்தமாக தோற்கும் நிலை உருவானது இறுதியாக ஒரு சில இடங்களில் மட்டும் திரிணாமூல் வெற்றி பெற, பாஜக உள்ளாட்சி தொகுதிகளை தனது கட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 ஆம் ஆண்டுக்கும், 2019 ஆண்டுக்கும் இடையில் பாஜகவின் செல்வாக்கு மேற்குவங்கத்தில் பணமடங்கு அதிகரித்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.


Next Story