Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு மாவட்டமே கூண்டோடு அணி மாற்றம்.? திக்குமுக்காடும் தினகரன் : அ.ம.மு.கவில் தலைகீழ் மாற்றம்.!

ஒரு மாவட்டமே கூண்டோடு அணி மாற்றம்.? திக்குமுக்காடும் தினகரன் : அ.ம.மு.கவில் தலைகீழ் மாற்றம்.!

ஒரு மாவட்டமே கூண்டோடு அணி மாற்றம்.? திக்குமுக்காடும் தினகரன் : அ.ம.மு.கவில் தலைகீழ் மாற்றம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Jun 2019 1:30 PM GMT


அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு மிகவும் நெருங்கிய நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஓபிஎஸ்-எடப்பாடி இணைவிற்கு பிறகு டிடிவி.தினகரன் தனித்துவிடப்பட்டார்.


இந்தநிலையில், சசிகலா சிறை சென்ற பிறகு அமமுக என்ற ஒன்றை ஆரம்பித்தார் தினகரன். அமமுக ஆரம்பித்த போது துணைப்பொதுசெயலாளராகவே இருந்து செயல்பட்டு வந்தார். இதேபோல், அதிமுகவில் இருந்து பலர் வெளியேறி எம்.எல்.ஏக்கள் பலர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். தினகரனை நம்பி வந்த பலருக்கு அதிமுகவில் இருந்து பதவி பறிபோனது. இருந்தாலும் டிடிவி.தினகரனுடன் இணைந்தே செயல்பட்டு வந்தார்கள்.


தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுக களம் கண்டது. ஆனால் தோல்வியை கண்டது. அந்த தேர்தல் தோல்வியால் துவண்டுபோய் இருந்த வேட்பாளர்களை அழைத்து பேசுவதை தினகரன் தவிர்த்தார்.


தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்பி ஆதித்தன், அண்ணாமலை ஆகியோர் அமமுகவுக்கு முழுக்கு போட்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.


இந்தநிலையில், நெல்லை தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பாப்புலர் முத்தையா, பாளை. மண்டல முன்னாள் தலைவர் எம்சி ராஜன், பாளை. பகுதி செயலாளர் அசன் ஜாபர் அலி, ஸ்ரீவை. சின்னத்துரை, வி.பி.மூர்த்தி உள்ளிட்ட பலர் அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், விஜிலா சத்யானந்த் எம்பி ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News