Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜம்மு காஷ்மீர் மாநில வரலாற்றில் முதன்முறையாக தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு !! பாஜக தலித்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை நிரூபிக்கும் அமித்ஷாவின் அதிரடி முடிவு!!

ஜம்மு காஷ்மீர் மாநில வரலாற்றில் முதன்முறையாக தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு !! பாஜக தலித்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை நிரூபிக்கும்  அமித்ஷாவின் அதிரடி முடிவு!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  5 Jun 2019 6:10 AM GMT


ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு சிறப்பு அந்தஸ்தை கொண்டுள்ள மாநிலமாகும் . இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்தின் முன்பாக அனைத்து மாநிலங்களும் சரிசமமான மாநிலங்கள் என கூறப்பட்டாலும் அந்த மாநிலம் மட்டும் சிறப்பு அந்தஸ்தை கொண்ட மாநிலமாக உள்ளது.


இந்த நிலையில் அரசியல் பிரதிநிதித்துவமும் காஷ்மீர் வரலாற்றில் எல்லா மக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இல்லை. அங்குள்ள பல இயக்கங்கள், சுயநல கட்சிகளின் மிரட்டலால் இதுவரை தொகுதிகள் சீரமைப்பு கூட செய்யப்பட்டதில்லை. இதனால் மாநிலத்தில் கிட்டத்தட்ட 11 சதவீத அளவில் தாழ்த்தப்பட்ட மக்களும், மலைவாழ் பழங்குடி மக்களும் அங்கு இருந்த போதிலும் அவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை. இது அந்த மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்துகு வருகிறது. ஆனால் அங்குள்ள அமைப்புகள் தாங்களே அரசியலில் ஆதிக்கம் செய்ய வசதியாக தாழ்த்தப்பட்ட இனத்தையும், பழங்குடி மக்களையும் புறக்கணித்து வந்தனர்.


இந்த நிலையில் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள அமித்ஷா முந்தைய ஏகாதிபத்திய பிரதிநிதித்துவத்துக்கு மாற்றம் கொண்டு வரும் வகையில் புதிய சீர்திருந்தங்களை பொதுவான அரசியல் சட்ட அமைப்பின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் , முதலில் எல்லையோரங்களில் உள்ள சட்ட சபை தொகுதிகளை மறு சீரமைப்பு செய்து முதன் முதலாக தாழ்த்தப்பட்டோருக்கான மற்றும் மலைவாழ் பழங்குடி மக்கள் அரசியல் பிரதிநித்துவம் பெரும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இது தொடர்பாக அந்த மாநில துணை இராணுவ தலைமை அதிகாரி மற்றும் சீனியர் அதிகாரிகளுடன் அமித்ஷா பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், கடந்த 3 நாட்களாக கவர்னர் சத்யபால் மாலிக், புலனாய்வு இயக்குனர் ராஜீவ் ஜெயின் மற்றும் உள்துறை செயலாளர் ராஜீவ் கபா ஆகியோருடன் இரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற சீரமைப்பு நடவடிக்கைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்ற மாநிலங்களில் எடுக்கப்படுகிறது. ஆனால் காஸ்மீரில் உள்ள கடுமையான சூழ்நிலைகள் காரணமாக கடந்த 1995 மற்றும் 2005 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அச்சத்தின் காரணமாக கைவிடப்பட்டது என்றும், தற்போது அமித்ஷா மிகவும் தைரியமாக இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகவும், இதனால் அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான அரசியல் பிரதிநித்துவ உரிமைகள் காஷ்ர் வரலாற்றில் முதன் முறையாக கிடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




https://www.indiatoday.in/india/story/government-toys-with-delimitation-commission-in-j-k-1542446-2019-06-04

Next Story