Kathir News
Begin typing your search above and press return to search.

குருநாதா.. காலையில் ஆறு மணிக்கு வரும் உதய சூரியனுக்கே இவங்க காவி நிறத்தை பூசிட்டாங்க - நெட்டிசன்கள் கலாய்ப்பு

குருநாதா.. காலையில் ஆறு மணிக்கு வரும் உதய சூரியனுக்கே இவங்க காவி நிறத்தை பூசிட்டாங்க - நெட்டிசன்கள் கலாய்ப்பு

குருநாதா.. காலையில் ஆறு மணிக்கு வரும் உதய சூரியனுக்கே இவங்க காவி நிறத்தை பூசிட்டாங்க - நெட்டிசன்கள் கலாய்ப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Jun 2019 1:47 AM GMT


போலியாக உருவாக்கப்பட்ட சர்ச்சைகள், பொய் பிரச்சாரங்கள் நிறைந்ததாக இன்றைய தமிழ் நாடு அரசியல் களம் இருக்கிறது. இந்திய திருநாட்டின் தவப்பதல்வர் முண்டாசு கவியும் இந்திய திருநாட்டின் முவர்ணக்கொடியில் இருக்கும் காவியும் தான் இன்றைய தேவையற்ற சர்ச்சை.
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியாரின் தலை பாகை நிறம் காவியாக இருப்பது அர்த்தமற்ற சர்ச்சையாக ஒரு சிலரால் பரப்பப்படுகிறது. பாரதியாருக்கு காவி தலைப்பாகை அணிவித்துவிட்டார்கள் என்று ஒரே களேபரம். என்னத்தான் இருக்கிறது என்று பார்ப்போம்.


மகா கவியான பாரதியார் என்கிற தேசியக் கவிக்கு, தேசியக்கொடியில் இருக்கிற மூன்று வண்ணங்களான காவி, வெள்ளை, பச்சை நிறங்களை, அதே வகையில் பாரதியாருக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்கள். தேசியக் கொடியின் மூன்று நிறங்களில் பாரதியார் காணப்படுவதே, தேசியக் கவிக்கான பொருத்தமான மரியாதை.


ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில் 'இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து அழித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற நிலைமையை உருவாக்க முனைகின்ற இந்துத்துவ சக்திகளின் பின்புலத்தில் இயங்கி வருகின்ற நரேந்திர மோடி அரசு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்களைப் புகுத்திவிட்டது', என்று கூறியுள்ளார்.
சமுக வலைதளங்களில் இந்த அறிக்கையை கிண்டல் அடித்துள்ளனர் நெட்டிசன்கள். போகிற போக்கை பார்த்தால் வீட்டில் செய்த 'கேசரி' யில் திட்டமிட்டே காவி கலர் கலந்துள்ளனர்னு சொல்லுவார்கள் போல என்று நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.


ஆமா குருநாதா காலையில் ஆறு மணிக்கு வரும் உதய சூரியனுக்கே இவங்க காவி நிறத்தை பூசிட்டாங்க, இதை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று சிலரும் கேட்கிறார்கள் என்று கிண்டல் செய்கின்றனர் சமூக வலைதளவாசிகள்.





காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் போல் எதை பார்த்தாலும் ஒரு சிலருக்கு காவியாக தோன்றுகிறது. மலர்வதெல்லாம் தாமரையாக தெரிகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க ஆதரவை இந்திய மக்கள் காவிக்கு தான் அளித்தார்கள் என்பதை நீர்த்து போக செய்கிறார்களா.? தமிழ் நாட்டில் விளையாடப்படும் வெறுப்பு அரசியல் அரசியல்வாதிகள் எள்ளி நகையாடப்படுகிறார்கள் என்பதே உண்மை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News