Kathir News
Begin typing your search above and press return to search.

பதவி வெறியின் உச்சத்தில் ஸ்டாலின்! பெரும் தொகைக்கு அதிமுக எம்எல்ஏக்களை வாங்க பேரம்! ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க இரவு பகலாக முயற்சி!!

பதவி வெறியின் உச்சத்தில் ஸ்டாலின்! பெரும் தொகைக்கு அதிமுக எம்எல்ஏக்களை வாங்க பேரம்! ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க இரவு பகலாக முயற்சி!!

பதவி வெறியின் உச்சத்தில் ஸ்டாலின்! பெரும் தொகைக்கு அதிமுக எம்எல்ஏக்களை வாங்க பேரம்! ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க இரவு பகலாக முயற்சி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Jun 2019 5:11 AM GMT



தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் தொடர்ந்து கனவு கண்டு வருகிறார். அவர் இதற்காக பல்வேறுவிதமான பித்தலாட்டங்களை செய்தார். ஆனால் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.


அதிமுக இரண்டாக உடைந்து சின்னாபின்னமாகி விடும், அதன் மூலம் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைத்தார் ஸ்டாலின். ஆனால் அந்த கனவில் மண்ணை வாரி போட்டுவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டாகப் பிரிந்த அதிமுக ஒன்றாக சேர்ந்து விட்டது.


அதன் பிறகு, தினகரனை தூண்டிவிட்டு, அதிமுகவில் உள்ள பல எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கனவு கண்டார். அந்தக் கனவும் பகல் கனவாகவே தொடர்ந்துவிட்டது.


பாராளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அப்போது 22 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும். அதன் மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழும். அடுத்த விநாடியே திமுக ஆட்சி அமைந்து விடும் என்றெல்லாம் ஒவ்வொரு பிரச்சாரம் மேடையிலும் ஸ்டாலின் புலம்பி வந்தார். அதுவும் நடக்கவில்லை.


பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் இடைத்தேர்தலில், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்று மிகத் தெளிவான தீர்ப்பளித்துவிட்டனர். அதிமுக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் 9 எம்எல்ஏக்களை கொடுத்துவிட்டனர் தமிழக மக்கள்.


இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் எப்படியாவது அதிமுக ஆட்சியை கலைத்தே தீர வேண்டும் என்று துடிக்கிறார். இதற்காக அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் போன்றவர்களை ஏற்கனவே ஸ்டாலின் விலைக்கு வாங்கி விட்டார். இப்போது மேலும் சில அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பேரம் நடத்தி வருகிறார். மிகப்பெரும் தொகைக்கு ஒவ்வொரு எம்எல்ஏக்களும் விலைபேசப்படுகின்றனர். அமைச்சர் பதவி என்ற ஆசை வார்த்தைகளும் அள்ளி வீசப்படுகின்றன. இதற்கு தரகு வேலை பார்க்கும் பணியில், திமுக கூட்டணி தலைவர்களும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.


மீன்கள் தண்ணீருக்கு வெளியே எப்படி வாழ முடியாமல் துடிக்குமோ, அதுபோலத்தான் திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டால் செத்தே போய்விடுவார்கள். மத்தியிலாவது தொத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மாநிலத்தில் தானாக ஆட்சி கவிழ்ந்து விடும் என்று நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இடைத்தேர்தல் மூலமாக அதிமுக அரசு, பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்துவிடும் என்று கனவு கண்டனர். அதுவும் நடக்கவில்லை. இப்போது அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் ஆட்சியை கலைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.


ஜனநாயகம் எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை. தங்கள் பணநாயகத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடித்தே தீருவது என்று ஸ்டாலின் உச்சகட்ட பதவிவெறியில் தூக்கமின்றி தவிக்கிறார். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. மக்களின் விருப்பத்திற்கு எதிரரனது என்று சிந்திப்பதற்கு, ஸ்டாலின் என்ன சனாதன தர்மத்தையா பின்பற்றி வருகிறார். கருவின் குற்றம் என்று வர்ணிக்கப்பட்ட கருணாநிதியின் மகன்தானே, எது வேண்டுமானாலும் செய்வார்!
என்னவேண்டுமானாலும் நடக்கலாம்!


Next Story
கதிர் தொகுப்பு
Trending News