Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது பாஜக! தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போயின!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jun 2019 7:21 AM GMT

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மே மாதம், 3 கட்டங்களாக உள்ளாச்சி தேர்தல்கள் நடந்தன. இதில், சந்திரசேகரராவின் டிஆர்எஸ் 446 ஜில்லா பரிஷத்களையும், 3556 மண்டல் பரிஷத்துகளையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 76 ஜில்லா பரிஷத் மற்றும் 1377 மண்டல் பரிஷத்துகளை வென்றுள்ளது. பாஜக 8 ஜில்லா பரிஷத்துகளையும், 211 மண்டல் பரிஷத்துகளையும் வென்று மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதே நேரம் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல்போய் உள்ளன.

இதுபோல நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் பாஜக 4 இடங்ளைப்பிடித்து 2 - வது இடத்தை பிடித்து இருந்தது. நிஜாமாபாத் பாராளுமன்ற இந்ததொகுதியில் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகளும், முன்னாள் எம்பியுமான கவிதாவை, பாஜக வேட்பாளர் அரவிந்த் தர்மபூரி தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தல்களிலும், தெலுங்குதேசம் கட்சியும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன.

எனவே மேற்கு வங்கம், ஒடிசாவைத் தொடர்நது தெலுங்கானாவிலும் பாஜக கொடி உயரே பறக்க தொடங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News