Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளாவில் தோல்விக்கு காரணம் சபரிமலை பிரச்சினைதான்! ஒப்புக்கொண்டது இந்திய கம்யூனிஸ்ட்!!

கேரளாவில் தோல்விக்கு காரணம் சபரிமலை பிரச்சினைதான்! ஒப்புக்கொண்டது இந்திய கம்யூனிஸ்ட்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  7 Jun 2019 10:33 AM GMT


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி வென்றது. தோல்வியை ஆராய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை மாநில நிர்வாகக்குழுவில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: - சபரிமலையில்10 வயதுக்கு மேல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும் பிரச்னையில் பிரணாயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு எடுத்த நடவடிக்கைகள், இந்துக்களை கோபம் அடைய செய்தது. அது கம்யூனிஸ்ட்களுக்கு எதிர்ப்பாக மாறியது. சபரிமலை பிரச்னையை அலட்சியப்படுத்தும் வகையில் அமைந்த கம்யூனிஸ்ட்களின் தேர்தல் பிரசாரம் இந்துக்களின் கோபத்தை அதிகரித்தது. சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து காங்கிரசுக்கு ஓட்டுபோட்டது, தோல்விக்கு மற்றொரு காரணம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சபரிமலை பிரச்னைதான் பாராளுமன்ற தேர்தல் படுதோல்விக்கு முக்கிய காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் பகிரங்கமாக ஒத்துக்கொண்டாலும், முதல்வர் பிரணாயி விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. வழக்கம்போல அவர்கள் பொலிட் பீரோவை கூட்டி ஆராய்சி செய்கிறார்கள். எது எப்படியோ இந்தியாவில் இருந்து கம்யூனிஸ்ட்கள் துடைத்து எறியப்பட்டுவிட்டார்கள். கேளராவில் தற்போது உள்ள கம்யூனிஸ்ட் அரசுதான், இந்தியாவின் கடைசி கம்யூனிஸ்ட் அரசாக இருக்கும். ஏற்கனவே தேசிய கட்சி என்ற அந்தஸ்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் இழந்து நிற்கின்றன. இந்த நிலையிலும் அவர்களின் இந்து விரோத செயல்பாடுகள் தொடரத்தான் செய்கிறது.


Next Story