Kathir News
Begin typing your search above and press return to search.

2049 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 30 வருடங்கள் இந்தியாவை ஆளவிற்கும் பா.ஜ.க !

2049 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 30 வருடங்கள் இந்தியாவை ஆளவிற்கும் பா.ஜ.க !

2049 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 30 வருடங்கள் இந்தியாவை ஆளவிற்கும் பா.ஜ.க !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jun 2019 2:54 AM GMT


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றியை பெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு, பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது பா.ஜ.க. 2014 தேர்தலில் வென்ற இடங்களை விட சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஒடிசா, வங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இருந்த இடமே தெரியாமல் இருந்த பா.ஜ.க, குறிகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் பல மாநிலங்களில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.


2014 ஆம் ஆண்டு 44 இடங்களை வென்ற காங்கிரஸ், இந்த தேர்தலில் 100 இடங்களையாவது கைப்பற்றும் என்று அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர். ஆனால், அதே இடத்திலேயே இருக்கிறது காங்கிரஸ். 2014 ஆம் ஆண்டு 19.3% மாக இருந்த வாக்கு சதவீதம் 19.5% மாக மாறியுள்ளது. தற்போது வென்ற இடங்களில் பாதி இடங்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் வென்றது. ஒட்டுமொத்த இந்தியாவும் ராகுல் காந்தியை புறக்கணித்துள்ளது. கடந்த ஆட்சியில் சில குறைகள் இருந்தாலும், மக்கள் மோடியை ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு காரணம் வலுவான எதிர்க்கட்சி இல்லாதது தான்.


மோடி அரசிற்கு பங்கம் விளைவிக்கிறேன் என்ற பெயரில், ரபேல் விவகாரத்தில் சொதப்பி மக்களின் நம்பிக்கையை இழந்தது காங்கிரஸ். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு பிரதமரை திருடன் என்று அழைத்தது மக்களை முகம் சுளிக்க வைத்து. ராகுலின் NYAY திட்டத்தின் தாக்கம் எங்கும் தென்படவில்லை. பொது கூட்டங்களில் உளறுவது, பேட்டிகளில் சம்பந்தமில்லாது உளறுவது, இந்தியாவின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லாதது, மோடி எதிர்ப்பு அரசியலை மட்டுமே கையில் எடுத்தது, போன்றவற்றால் சொந்த தொகுதியிலேயே தோற்றார் ராகுல்.


ராகுல் காங்கிரஸின் தலைவராக இருக்கும் வரை பா.ஜ.க தான் ஆட்சி பீடத்தில் இருக்கும். 2029 வரை மோடி தான் பிரதமர் என்பது தெளிவாக தெரிகிறது. 2029 தேர்தலில் அமித் ஷா வை முன்னிறுத்தலாம், அப்போது அவரின் வயது 64 ஆக இருக்கும். ராகுலின் வயது 58 ஆக இருக்கும். 2044 வரை அமித்ஷாவே தொடர்வார். பிறகு யோகி, பாட்னவிஸ் என்று பல தலைவர்கள் உள்ளனர். காங்கிரஸில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லை. தலைமையும் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்க விரும்பவில்லை.


இதை நம்பமுடியவில்லை என்று கூறுவோர், குஜராத்தை எடுத்து கொள்ளலாம். 24 வருடங்களில் ஒரு தேர்தலில் கூட காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. 2017 ஆம் ஆண்டு பா.ஜ.க மீது அதிருப்தி இருந்தாலும் குஜராத் மக்கள் பா.ஜ.க வையே தேர்ந்தெடுத்தனர். காரணம் காங்கிரஸில் சொல்லிக்கொள்ளும் தலைவர்கள் இல்லை. இப்படியே தொடர்ந்தால் அடுத்த 30 வருடங்கள் பா.ஜ.க தான் ஆட்சியில் இருக்கும்.


Courtesy : theprint.in


Next Story
கதிர் தொகுப்பு
Trending News