Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபல காமெடி நடிகர் வாழ்வில் இத்தனை சோதனையா?

பிரபல காமெடி நடிகர் வாழ்வில் இத்தனை சோதனையா?

பிரபல காமெடி நடிகர் வாழ்வில் இத்தனை சோதனையா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jun 2019 3:02 AM GMT


தமிழ் சினிமாவின் காமெடியன்களில் பலருக்கும் தெரிந்த முகங்களில் ஒருவர் நடிகர் விஜய் கணேசன். அம்மி கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல இருக்கிறது என் கட்சி காரரின் கபாலன் என வடிவேலுவின் காமெடியில் இவரை பார்த்திருப்பீர்கள் தானே. அவரின் பல வசனங்கள் செம ஹிட்.


அஜித் நடித்த ராஜா, விஜய் நடித்த மதுர படங்களில் நடித்தவர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். அந்த காமெடிகளுக்கு இன்றும் கிளாப்ஸ் தான்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தன் பெயருக்கு முன்னால் விஜய் என சேர்த்துக்கொண்டாராம். மேலும் சொந்த ஊரான புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்தாராம். இங்கே தெரிந்தவர் ஹோட்டலில் வேலை செய்து பிளாட் ஃபாரத்தில் படுத்து தூங்கிகொண்டிருந்தாராம்.


பின் அவருடன் இருந்த கதை ஆசிரியர் மூலமாக நாடகத்தில் நடித்த பிறகு கார்த்திக் நடித்து வெளிச்சம் படத்தில் நடித்தராம். அதில் அவருக்கு பத்து ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.பின் வடிவேலு கொடுத்த சான்ஸ் மூலம் சினிமாவில் நடித்து வந்தாராம். மேலும் படம் இல்லாத நேரத்தில் YG மகேந்திரனின் நாடககுழுவுக்கு மேனேஜராக இருந்து வந்தாராம். அவர் தான் இவரை காமெடியனாக மாற்றியதாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News