Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜராஜ சோழன் அயோக்கியன் அவன் ஆட்சி கேவலமான ஆட்சி சாதிவெறியை தூண்டிய இயக்குனர் ப.இரஞ்சித்!

ராஜராஜ சோழன் அயோக்கியன் அவன் ஆட்சி கேவலமான ஆட்சி சாதிவெறியை தூண்டிய இயக்குனர் ப.இரஞ்சித்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  9 Jun 2019 12:02 PM GMT


இயக்குனர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில்: தமிழ் மன்னர் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலம் தான் தமிழர்களின் இருண்ட காலம் என கூறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில் பல சாதிக்கார்கள் ராஜ ராஜ சோழன் தங்கள் சாதி தான் என்று போட்டி போடுகின்றனர் . ஆனால் ராஜ ராஜ சோழன் எனது சாதியாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை,


ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலத்தில் அவரின் சூழ்ச்சியால் நான் சார்ந்த எங்கள் சாதிகாரர்கள் ( தலித்துகள் )நிலம் பறிக்கபட்டது என்றும். பெண்களை விலை மாதுவாக மாற்றி தேவதாசி அமைப்பு முறையை நடைமுறை படுத்திய அயோக்கியன் தான் ராஜ ராஜ சோழன் என தமிழர்களால் போற்றப்படும் மாமன்னர் ராஜ ராஜ சோழனை மிக கடுமையாக பேசினார் பா.ரஞ்சித்.


இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சுக்கு பலர் தங்கள் எதிர்பை தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில் “ வரலாறு தெரியாமல் பா.ரஞ்சித் பேசுகிறார் தேவதாசிகள் கீழை சாளுக்கியத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இங்கே தமிழர்களை யாரும் விலை மாதுவாக மாற்றப்படவில்லை என கூறிப்பிட்டார்.


திருச்சியை சேர்ந்த தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில். தமிழ் மன்னர் ராஜ ராஜ சோழன் ஆசிய கண்டத்தையே ஆண்டவர். அந்த காலத்திலயே முப்படைகள் வைத்திருந்த பெருமை உலகம் அறியும் அவ்வாறு இருக்கையில் இவர்கள் இவர்களுடைய நிலங்களை அபகரித்ததாக பேசுவது தவறு. மன்னர் காலத்தில் ஏழை மக்களுக்கு பல்வேறு வகை மானியங்களாக நிலம் தானமாக வழங்கபட்டதே தவிர பிடுங்கியதாக வரலாறு கிடையாது. மேலும் ராஜராஜ சோழன் மன்னவர்களில் சிறந்தவனாக தமிழ் மக்களால் மதிக்கப்படுகிறார். ராஜராஜ சோழன் ஆண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.


எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தனது பேச்சை கேட்பதற்கு தனக்கு பின்னால் சில சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்பதற்காக இது போன்ற சாதி கலவரத்தை தூண்டி பொய் வரலாற்றை திணிக்க முயற்சிக்கிறார் இவர் மீது வழக்கு பதிவு செய்து. சிறையில் அடைக்க வேண்டும் என மற்றொரு தமிழ் ஆர்வலளர் கூறினார். மேலும் தற்போது இவருக்கு சினிமாவில் வாய்ப்பில்லை. ரஜினியால் முன்னுக்கு வந்தவர் தனது ஒழுக்கக் கேடான செயல்பாடுகளால் சினிமாவில் ஓரம் கட்டப்படுகிறார்.


இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் குழப்பத்தை விளைவிக்க சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஓன்று இவர் பின்னால் இருந்து முடுக்கிவிடுவதாகவும், அந்த குழுவினர் இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர் உமர்கயூம் எழுதிய “ செங்கழனி நாட்டின் சேரிப்புறங்கள்” என்ற நூலை இவருக்கு படிக்கக் கொடுத்து இவர் மூளையை சலவை செய்துள்ளதாகவும், இதனால் அரசியலில் நுழைந்தால் பணம் அதிகம் பெறலாம், புகழும் கூடும் என உசுப்பேத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.


இந்த நிலையில் ராஜராஜ சோழனை இவர் அவமதித்ததை அடுத்து, நெட்டிஸன்கள் இவரை மிகவும் கலாய்த்து வருகின்றனர். இவரை நட்சத்திர இயக்குனராக அறிமுகப்படுத்தி ரஜினிகாந்த் தன்னை அவமதித்துக் கொண்டார் எனவும் பதிவிடுகின்றனர். ‘ நாயை குளிப்பாட்டி நாடு வீட்டில் வைத்தாலும் அது புத்தி போவாது’ என்பார்களே அதுபோல ரஞ்சித்தின் செயல்பாடு உள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Next Story