Top
undefined
Begin typing your search above and press return to search.

“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான்; ஆனால் காங்கிரஸ் தோல்விக்கு அவர் பொறுப்பல்ல” - திட்டவட்ட அறிவிப்பு!!

“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான்; ஆனால் காங்கிரஸ் தோல்விக்கு அவர் பொறுப்பல்ல”    - திட்டவட்ட அறிவிப்பு!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Jun 2019 1:44 PM GMT



நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தோல்விக்கு காரணம் ப.சிதம்பரம், கமல்நாத் போன்ற மூத்த தலைவர்கள் மிரட்டி தங்களின் மகன்களுக்கு சீட் வாங்கியதுதான் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். அதோடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்.


இதுதொடர்பாக பெரிய விவாதமே நடந்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஏகே அந்தோணி தலைமையில் இன்று நடந்தது.


இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரம், காங்கிரசின் படுதோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.


இந்த கூட்டம் முடிந்தபிறகு நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “ராகுல் காந்திதான் காங்கிரசின் தலைவராக இருந்தார். தலைவராக இருக்கிறார். தலைவராக இருப்பார்” என்று அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்தினார்.


இத்துடன் ராகுல் காந்தியின் ராஜினாமா நாடகம் நிறைவுக்கு வந்தது.


Next Story