Top
undefined
Begin typing your search above and press return to search.

மீண்டும் அதிமுகவுக்கு ரிவர்ஸ் எடுத்த ராதாரவி: எடப்பாடியை சந்தித்து இணைந்தார்!!

மீண்டும் அதிமுகவுக்கு ரிவர்ஸ் எடுத்த ராதாரவி: எடப்பாடியை சந்தித்து இணைந்தார்!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  12 Jun 2019 11:25 AM GMT



திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்த நடிகர் ராதாரவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.


கொலையுதிர்காலம் பட விழாவில், நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சையானதால், திமுகவிலிருந்து, அவர் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் தன்னிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தாம் முழுமையாக திமுகவிலிருந்து விலகிக் கொள்வதாக ராதாரவி கருத்து கூறி வந்தார்.


இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்த நடிகர் ராதாரவி, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.


Next Story