Top
undefined
Begin typing your search above and press return to search.

நில அபகரிப்பில் மீண்டும் தி.மு.க-வினர்? பொள்ளாச்சி தி.மு.க எம்.பி சண்முகசுந்தரத்தின் உறவினர் அடாவடி!

நில அபகரிப்பில் மீண்டும் தி.மு.க-வினர்? பொள்ளாச்சி தி.மு.க எம்.பி சண்முகசுந்தரத்தின் உறவினர் அடாவடி!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  13 Jun 2019 12:43 PM GMT


தி.மு.க ஆட்சியில் அக்கட்சி அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்களை வரை நில அபகரிப்புகளில் ஈடுபடாதவர்கள் மிகக்குறைவு. இப்போதும் தி.மு.க-வினரின் நில அபகரிப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. என்றாலும் தி.மு.க-வால், மத்தியிலோ மாநிலத்திலோ அதிகாரத்தில் அமர முடியவில்லை. இருந்தாலும் தி.மு.க-வினர் அடாவடிகளில் இறங்கி விட்டனர் என்று குறிப்பிடுகிரது ஏசியாநெட் செய்தி குறிப்பு. ஆமாம் நில அபகரிப்பு அடாவடி.





பொள்ளாச்சி தி.மு.க எம்பி சண்முகசுந்தரம். இவரது தாய்மாமன் வீடு உடுமலைப்பேட்டை அருகே இளையமுத்தூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டின் அருகே உள்ள நிலத்தை சண்முகசுந்தரம் தரப்பினர் அடிமாட்டு விலைக்கு கேட்டு உள்ளனர். விலை மிகவும் குறைவு என்பதால் அவர் மறுத்துவிட்டார். மற்றொருவர் அந்த இடத்தை நியாயமான விலைக்கு வாங்க முன் வந்துள்ளார். அதற்கான முன்பணமும் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க எம்.பி சண்முகசுந்தரத்தின் ஆட்கள், அந்த இடத்தை வாங்கியவரை மிரட்டி உள்ளனர். பத்திரப்பதிவு செய்ய விடமாட்டோம் என்றும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.





அத்தோடு அந்த இடத்தருகில் இருந்த வழித்தடத்தையும் ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு சண்முகசுந்தரம் எம்.பி-யின் உறவினர்கள் அழித்து விட்டனர். இந்த வழித்தடம் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சண்முகசுந்தரம் எம்.பி-யின் ஆட்களின் மிரட்டலால், எதிர்தரப்பினர் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.


எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதட்டத்தில் இருக்கின்றனர், அப்பகுதி மக்கள்.


இந்நிலையில் இது குறித்து ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள தி.மு.க எம்.பி சண்முகசுந்தரம் இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஊடகத்திற்கு தவறான தகவல் கொடுத்துள்ளனர் என்றும் "எனக்கும் அந்த நிலத்திற்கும் , அந்த நிலத்தின் மீதுள்ள பிரச்சனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.




https://twitter.com/kshanmugamdmk/status/1138989961498075136


இருப்பினும் இந்த சம்பவத்தை மறுத்தோ, ஆதரித்தோ அதிகாரப்பூர்வமாக போலீஸ் தரப்பிடம் இருந்தோ, எம்.பி தரப்பிடம் இருந்தோ எந்த தகவலும் இதுவரை வரவில்லை.


Next Story