Top
undefined
Begin typing your search above and press return to search.

பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு!!

பாரதிய ஜனதா கட்சியின்  செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு!!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 Jun 2019 2:53 PM GMT


பா.ஜ.க வின் செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ.க தேசிய தலைவராக அமித்ஷா, இருந்து வருகிறார் தர்பொது அவர் மத்திய உள்துறை அமைச்சராக பொறு்ப்பேற்றுள்ளார்.


இந்த வருட தொடக்கத்திலேயே பாஜக தலைவர் அமித்ஷா பதவிக்காலம் முடிவுற்றது. எனினும், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைவர் பதவியில் தொடர பா.ஜ.க கேட்டுக்கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சிமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில் பா.ஜ.க செயல் தலைவராக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.அமித்ஷா பா..ஜ. தேசிய தலைவராக வரும் டிசம்பர் வரை தொடர்வார் எனவும் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story