Top
undefined
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் அழுத்தம் எதிரொலி: மேலும் 50 முதலைகளின் பெயர்களை கக்கும்...சுவிட்சர்லாந்து !!

மோடி அரசின் அழுத்தம் எதிரொலி: மேலும் 50 முதலைகளின் பெயர்களை கக்கும்...சுவிட்சர்லாந்து !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  17 Jun 2019 5:35 AM GMT


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, கடந்த சில வாரங்களில் சுமார் 50 இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்விஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியது.


இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த ஓராண்டில் 100-க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. கடந்த சில வாரங்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு முதல்கட்டமாக ஏற்கெனவே ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ததால், அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, மேல்முறையீட்டுக்கு இறுதி வாய்ப்பு அளித்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மேலும் 50 பேரின் விவரங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னதாக, ஸ்விஸ் அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிக்கைகளில், இந்திய வாடிக்கையாளர்களின் சிலரது பெயர் முழுமையாக இடம் பெற்றிருந்தது. சிலரது பெயர் தலைப்பெழுத்துகளாக மட்டுமே இடம்பெற்றிருந்தன. அதில் இரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


Next Story