Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீரில்லை! ஸ்டாலின் சிங்கப்பூரில் உல்லாசம்! திசை திருப்ப “தமிழ் வாழ்க” கோஷத்தை கையில் எடுத்த ஊடகங்கள்!!

சென்னையில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீரில்லை! ஸ்டாலின் சிங்கப்பூரில் உல்லாசம்! திசை திருப்ப “தமிழ் வாழ்க” கோஷத்தை கையில் எடுத்த ஊடகங்கள்!!

சென்னையில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீரில்லை! ஸ்டாலின் சிங்கப்பூரில் உல்லாசம்! திசை திருப்ப “தமிழ் வாழ்க” கோஷத்தை கையில் எடுத்த ஊடகங்கள்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jun 2019 9:40 AM GMT



பாராளுமன்றத்தில் பதவி ஏற்றபோது, “தமிழ் வாழ்க” “பெரியார் வாழ்க” என்று கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட பலர் உரக்க கத்தினார்கள். தமிழக ஊடகங்கள், முதல் முறையாக பாராளுமன்றத்தில் தமிழில் பதவி ஏற்றது போலவும், தமிழ் வாழ்க என்று கொஷம் போட்டது போலவும் தொடந்து பரப்பி வருகின்றன.





இவை பற்றியே தொடர்ந்து விவாதம் செய்து மீண்டும் ஒருமுறை முக ஸ்டாலின் மீதான விஸ்வாசத்தை காட்டிவருகின்றன. அதாவது சென்னை மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீரின்றி தவிக்கின்றனர். ஆனால் பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவர் முக ஸ்டாலின், குடும்பத்தோடு சிங்கப்பூரில் கோலாகலமாக என்ஜாய் பண்ணுகிறார். இந்த இக்கட்டான சோதனையான காலத்தில் மக்களுடன் இருந்து மக்கள் பணியாற்றுவதுதானே எதிர்க்கட்சி தலைவரின் கடமை. இவைகளைப் பற்றி மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.





ஆகவேதான் இதனை திசை திருப்பிவிட “தமிழ் வாழ்க” கோஷத்தை கையில் எடுத்து உள்ளனர். இந்தியா முழுவதும் அனைத்து மத்திய அரசு பல்கலைக்கழகங்களிலும் திருக்குறளை அறிமுகம் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இதன் மூலமாக தமிழ் வளராது என்பது போலவும், பாராளுமன்றத்தில் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என்று கோஷம் போட்டுவிட்டதால் தமிழ் வளர்ந்துவிட்டது போலவும் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்துவது எத்தகைய ஊடக தர்மம் என்பது புரியவில்லை.


ஆனால் ஒன்று, தமிழர்கள் காலி குடங்களுடன் இரவு பகலாக, தெருத்தெருவாக அலையும்போது, முதல்வர் கனவில் உலாவரும் ஸடாலின், சிங்கப்பூருக்கு உல்லாச பயணம் சென்றுள்ளதை போர்வை போட்டு மூடி மறைக்க ஊடகங்கள் பகீரதபிரயத்தம் செய்வது அப்பட்டமாக தெரிகிறது.





சரி, பாராளுமன்றத்தில் இதற்கு முன்பு யாருமே தமிழில் பதவிப் ஏற்கவில்லையா? ஏராளமானோர் ஏற்கனவே தமிழில் பதவி ஏற்று உள்ளனர். குறிப்பாக திமுகவினரால் பாப்பாத்தி, கர்நாடகாகாரி என்றெல்லாம் கேவலமாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா, 1982 - ஆம் ஆண்டு பாராளுமன்ற மேல் சபை உறுப்பினரானபோது, அவர் தமிழில்தான் பதவி ஏற்றார். பாஜகவைச் சேர்ந்த பொன்.இராதாகிருஷ்ணன், தமிழில்தான் பதவி ஏற்றார். இதுபோல இன்னும் ஏராளமானோர் தமிழில் பதவி ஏற்று உள்ளனர்.


ஆனால், தீடீரென இப்போதுதான் பாராளுமன்றத்தில் தமிழில் பதவி ஏற்பதுபோல் மிகப்பெரிய விவாதங்களை தமிழ் தொலைக்காட்சிகள் அரங்கேற்றுவது அவர்களின் ஸ்டாலின் பாசத்தை பறைசாற்றுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News