Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனாதிபதி உரையின்போது செல்போனை நோண்டிக்கொண்டிருந்த ராகுல் காந்தி!!

ஜனாதிபதி உரையின்போது செல்போனை நோண்டிக்கொண்டிருந்த ராகுல் காந்தி!!

ஜனாதிபதி உரையின்போது செல்போனை நோண்டிக்கொண்டிருந்த ராகுல் காந்தி!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jun 2019 12:44 PM GMT



17 - வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாவது நாளான நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.





இந்நிலையில், இன்று பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: -


உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5 - வது இடம் வகிக்கிறது. கருப்பு பணத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும். ஜிஎஸ்டி வரி முறையால் சிறு தொழில்கள் பலன்பெற்றுள்ளன. வருங்கால சந்ததியினருக்காக நாம் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கைதான் ஜல்சக்தி துறை உருவாக்கம். கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது.


எந்த துறையிலும் லஞ்சம் மற்றும் ஊழலை அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. சட்டவிரோத குடியேறிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.


பயங்கரவாதத்துக்க எதிரான நடவடிக்கையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா சபை அறிவித்ததே இதற்கு சான்று.


விண்வெளி தொழில்நுட்பத்தால் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி பாதை ஏற்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பணியாற்றி வருகிறது.


இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.





ராம்நாத் கோவிந்தின் உரையை, பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைவரும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வழக்கம்போல சிறுபிள்ளை தனமான செல்போனை நோண்டிக்கொண்டிருந்தார். அவர், ஜனாதிபதி உரையில் கவனம் செலுத்தவில்லை. சுமார் 24 நிமிடங்கள், மொபைல் போனை நோண்டிக்கொண்டிருந்த அவர், அதில் ஏதோ டைப் செய்தார். தொடர்ந்து, மொபைல் போனில் படம் பிடித்தார்.


ஜனாதிபதி உரைக்கு எம்.பி.,க்கள் வரவேற்பு தெரிவித்து மேஜையை தட்டினர். சோனியாவும் மேஜையை தட்டினார். ஆனால், ராகுல் அதனை கண்டுகொள்ளவில்லை.





ஜனாதிபதி உரையில், சர்ஜிக்கல் தாக்குதல், பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் குறித்து குறிப்பிட்டார். அப்போது சோனியா உள்ளிட்ட அனைத்து எம்பிக்களும் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதற்கு மாறாக, ராகுல் தரையை பார்த்து கொண்டிருந்தார்.


ராகுலின் இந்த செயல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி செல்போனை நோண்டிக்கொண்டிருந்ததை கவனித்த மற்ற எம்பிக்கள், “ராகுல் காந்தி இன்னமும் பொறுப்பில்லாதவராகவே இருக்கிறாரே” என்று முணுமுணுத்துக்கொண்டர்.


Source : https://www.opindia.com/2019/06/rahul-gandhi-seen-busy-with-his-phone-during-presidents-address-to-the-joint-session-of-parliament/?utm_source=onesignal&utm_medium=push


Next Story
கதிர் தொகுப்பு
Trending News