Top
undefined
Begin typing your search above and press return to search.

நிச்சயம் முடிந்தது - திருமணம் எப்போது? மயக்கம் என்ன நாயகியின் ஓபன் டாக்

நிச்சயம் முடிந்தது - திருமணம் எப்போது? மயக்கம்  என்ன நாயகியின் ஓபன் டாக்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  21 Jun 2019 2:34 AM GMT


2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில்
வென்றவர். தெலுங்கில் வந்த லீடர் என்ற படத்தின் மூலம் சினிமாவில்
அறிமுகமானார். மயக்கம் என்ன மற்றும் ஒஸ்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து
சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாததால், தெலுங்கில் ஒரு சில படங்களில்
மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து 5 வருடங்களாக ஒதுங்கி இருந்தார்.


இந்த
நிலையில், பிஸினஸ் ஸ்கூல் ஒன்றில் பெரிய பொறுப்பு வகிக்கும் ரிச்சா,
வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது
குறித்து அவர் கூறுகையில், எனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக ஜோ லிக்கல்லா என்பவரை காதலித்து வந்தேன். இதையடுத்து,
எங்களது காதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக விரைவில்,
எங்களது திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், திருமண தேதி இன்னும்
முடிவாகவில்லை என்று கூறியுள்ளார்.


நடிகை ரெஜினாவிற்கும் திருமணம்
நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க
இருப்பதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story