Kathir News
Begin typing your search above and press return to search.

கேரள அரசின் உதவியை தமிழக முதல்வர் மறுத்துவிட்டார் என்று போலி பரப்புரையை செய்த ஊடகங்கள் : உண்மை என்ன தெரியுமா?

கேரள அரசின் உதவியை தமிழக முதல்வர் மறுத்துவிட்டார் என்று போலி பரப்புரையை செய்த ஊடகங்கள் : உண்மை என்ன தெரியுமா?

கேரள அரசின் உதவியை தமிழக முதல்வர் மறுத்துவிட்டார் என்று போலி பரப்புரையை செய்த ஊடகங்கள் : உண்மை என்ன தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jun 2019 7:29 PM GMT


தமிழகத்தில் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பதிவிட்டில், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவ தயாராக இருக்கிறோம். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்ப தயார். இது குறித்து தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.


இது குறித்து, தமிழக அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வராத நிலையில், கேரள அரசின் உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார் என்ற போலி செய்திகளை சில தமிழக ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட துவங்கின.


இந்த போலி செய்திகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெளிவான அறிக்கையை வெளியிட்டார்.





இது குறித்து அவர் பதிவிடுகையில், "மாண்புமிகு கேரள முதலமைச்சரின் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும்,குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.


சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். கேரள அரசு தினமும் 2MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என நம் தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உரிய முடிவினை அறிவிப்பார்கள்.


இதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/SPVelumanicbe/status/1141741849150779392?s=19


இதனை தொடர்ந்து, சில ஊடகங்கள் உள் நோக்கத்துடன் கட்டவிழ்த்து விட்ட போலி செய்தி தாற்போது நிரூபணம் ஆகியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News