Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜ்யசபாவில் ஜூலை மாதத்திலேயே முழு மெஜாரிட்டி!! பாஜக வகுக்கும் வியூகங்கள் !!

ராஜ்யசபாவில் ஜூலை மாதத்திலேயே முழு மெஜாரிட்டி!! பாஜக வகுக்கும் வியூகங்கள் !!

ராஜ்யசபாவில் ஜூலை மாதத்திலேயே முழு மெஜாரிட்டி!! பாஜக வகுக்கும் வியூகங்கள் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2019 7:06 AM GMT


தற்போது ராஜ்யசபாவில் பாஜக மற்றும் இதன் கூட்டணி கட்சிகளுக்கு 102 இடங்கள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நான்கு எம்பிக்கள் பாஜகவில் இணைந்து விட்டதால் எண்ணிக்கை 106 அக உயர்ந்துள்ளது. மெஜாரிட்டிக்கு இன்னும் 16 எம்பிக்கள் தேவை என்ற நிலையில் அடுத்த மாதத்துக்குள் பாஜக அந்த தேவையை எப்படி நிறைவு செய்ய உள்ளது என்பதை பற்றிய அலசல் இது.


அடுத்த மாதம் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தல் மூலம் பிஜேபி ராஜ்யசபையில் தனக்கென 80 உறுப்பினர்களை எட்டி விடும் நிலையில் இருக்கிறது. 2014 ல் மோடி தலைமையில் பிஜேபியின் முதலாவது
ஆட்சி அமையும் பொழுது ராஜ்யசபா வில் 45 உறுப்பினர்களாக இருந்த பிஜேபியின் பலம் இப்பொழுது 80 ஆக உயர இருப்பதை நினைத்தால்
ஆச்சரியமாக இருக்கிறது.


அனேகமாக அடுத்த ஆண்டு முடிவதற்குள் பிஜேபி குறைந்தது ராஜ்யசபாவில் 100 உறுப்பினர்களை வைத்து இருக்கும். அந்த அளவிற்கு மிக துல்லியமாக திட்டம் போட்டு செயல்படுகிறார் அமித்ஷா. வருகின்ற ஜூலை மாதம் 5 ம் தேதிநடைபெற இருக்கின்ற 6 இடங்களுக்கான ராஜ்
ய் சபா தேர்தலில் 3 இடங்கள் பிஜேபிக்கும் 3 இடங்கள் பிஜேபியின்
கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்கும் நிலையே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


மேலும் அவர்கள் கூறுகையில், குஜராத்தில் காலியாக உள்ள 2 இடங்களும் பிஜேபிக்கு தான் என்றும் உறுதியான நிலையில் ஒடிசாவில் இருந்தும் ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்க இருப்பதாகவும், ஒடிசாவில் காலியாக உள்ள 4 இடங்க ளில் 3 க்கு மட்டுமே வருகின்ற 5 ம்தேதி தேர்தல் நடைபெற
உள்ளதாகவும் கூறுகிறார்கள்.


ஒடிசாவை பொறுத்தவரை ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற குறைந்தது 37 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். பிஜூ ஜனதா தளத்திற்கு 112 எம்
எல்ஏக்கள் இருக்கிறார்கள். பிஜேபிக்கு 23 எம்எல்எல்ஏக்கள் இருக்கிறார்கள். நவீன்பட்நாயக் நினைத்தால் மூன்று ராஜ்யசபா இடங்களையும் பெற
முடியும். ஆனால் அவர் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மூன்றாவது வேட்பாளராக பிஜேபியால் நிறுத்தப் பட்டுள்ள அஸ்வினி வைஸ்ணவ்க்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளார்.


இதனால் ஒடிசாவில் இருந்தும் பிஜேபிக்கு ஒரு ராஜ்யசபா எம்பி உறுதியாகி விட்டது. அதுமட்டுமன்றி நவீன் பட்நாயக் பிஜேபியோடு நெருங்கி வருவதால் அடுத்த வருடத்தில் தான் பிஜேபி கூட்டணி ராஜ்யசபாவில் மெஜாரிட்டி பெற முடியும் என்கிற நிலை மாறி அடுத்த மாதமே பிஜேபி கூட்டணி ராஜ்யசபா வில் மெஜாரிட்டி பெறுகிற
நிலை தற்போது உருவாகி விட்டது.


ராஜ்யசபா தேர்தலில் அமித்ஷா மிக அற்புதமாக காய் நகர்த்தி வருகிறார்.நியாயப்படி இப்பொழுது ராஜ்யசபா வுக்கு காலியாக உள்ள இடங்கள் 9.
-2 குஜராத்-2 ஒடிசா-4 தமிழ்நாடு-1 இந்த 9 இடங்களும் ராஜ்யசபா எம்பிக்கள்களாக இருந்து லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற 4 பேர் ராஜ்யசபா எம்பிக்களாக இருந்துஎம்எல்ஏ க்களாக தேர்வு பெற்ற 4 பேர் அடுத்துகட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் ஆகிய 9 எம்பிக்களின் ராஜினாமாவினால் இந்த காலியிடங்கள் உருவானது.


இதற்கு ஒரே நேரத்தில் தேர்தல் வைத்து இருந்தால் ஒடிசாவில் 4 இடங்கள் பிஜூ ஜனதாதளத்திற்கும் குஜராத்தில் 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கும், பீகாரில் 1 இடம் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கும் சென்று இருக்கும்.ஆனால் தனித்தனியாக நடைபெறுவதால் தான் பிஜேபிக்கு குஜராத்தில் 1, பீகாரில் 1 ஒடிசாவில் 1 ஒ ன்று என 4 இடங்கள் அதிக
காக கிடைக்கும்.


இதே மாதிரி ராஜ்யசபா தேர்தல் தமிழகத்திலும் நடைபெற
வாய்ப்புகள் இருப்பதால் திமுக நினைத்துக்கொண்டு இருக்கும் 3 ராஜ்யசபா இடங்கள் நிச்சயமா க கிடைக்காது. 2 ராஜ்யசபா இடங்கள் தான் திமு கவுக்கு கிடைக்கும். அதிமுகவுக்கு 3 இடங்களும் பிஜேபிக்கு 1 இடமும் கிடைக்க வாய்ப்புள்ளது.


என்னடா பிஜேபிக்கு தமிழ்நாட்டில் எப்படி ஒரு ராஜ்யசபா இடம் கிடைக்கும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.தமிழகத்தில் 234 சட்ட மன்ற தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் காலி யாக இருப்பதால் 232 எம்எல்ஏக்கள் தான் வாக்க அளிக்க முடியும். இதில் அதிமுகவுக்கு 123 எம்எ ல்ஏக்கள் இருக்கிறார்கள்.


திமுக கூட்டணிக்கு 108 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். தினகரன் யாருக்கு ஆதரவாக இருப்பார் என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும்.தமிழக த்தில் ஒரு ராஜ்யசபா சீட்டில் வெற்றி பெற குறைந்தது 34 எம்எல்ஏ க்கள் ஆதரவு இருக்க வேண்டும் தமிழகத்தில் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெற
இருக்கிறது.


இப்பொழுது காலியாக இருப்பது கனிமொழி ராஜினாமா செய்த இடம் மட்டுமே இருக்கிறது. ஆனால் அடுத்த ஜூலை மாதம் இன்னும் 5 எம்பிக்களின் பதவி முடிய இருப்பதால் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.அதிமுகவை சர்ந்த 4 எம்பிக்களோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் டி.ராஜா அவர்களின் பதவியும் முடிவடைகிறது.


இந்த 6 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் 34×3=102 எம்எல்ஏ க்களின் ஆதரவுடன் திமுகவுக்கு 3 எம்பிக்கள் உறுதியாக கிடை
த்து விடுவார்கள். அதே மாதிரி அதிமுகவுக்கும் 3 எம்பிக்கள் கிடைத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது காலியான கனிமொழி சீட்டிற்கும் இனி ஜூலை 24 ல் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடை பெற்றால் திமுகவுக்கு 2 எம்பிக்கள் மட்டுமே கிடைப்பார்கள்.அதிமுகவுக்கு 4 எம்பிக்கள் கிடைத்து விடுவார்கள்.


இது எப்படி என்றால் முதலில் கனிமொழி இடத்திற்கு தேர்தல் நடைபெற்றால் அதிமுகவுக்கு உள்ள 123 எம்எல்ஏ க்களின் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்று விடும் .அடுத்து 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றால் அதிலும் அதிமுக குறைந்தது ஒரு எம்பிக்கு 40 முதல் முன்னுரிமை வாக்குகளை அளித்து 3×40=120 என்கிற அளவில் 3 எம்பிக்களை பெற்று விடும் வாய்ப்பு உள்ளது.


திமுகவுக்கு 108÷3=36 என்கிற அளவில் தான் முதல் முன்னுரிமை வாக்குகள் இருப்பதால் 2 எம்பிக்களை மட்டுமே பெற முடியும்.இரண்டாவது
தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு எம்பி சீட் போனசாக கிடைப்பதால் அது பிஜேபிக்கு அழைக்கப்படும் வாய்ப்புள்ளது .அனேகமாக அது வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது.


எனவே அடுத்த மாத இறுதியில் பிஜேபிக்கு 80 ராஜ்யசபா எம்பிக்கள் இருப்பார்கள் வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜ்யசபா வில் பிஜேபிக்கு 71 எம்பி க்கள் இருந்தார்கள் இப்பொழுது 4 தெலுங்கு தேச எம்பிக்களையும் சேர்த்து 75 எம்பிக்களாகி விட்டார்கள். அதோடு அதிமுக-13 , ஐக்கிய ஜனதா தளம்-6


சிவசேனா -3 சிரோன்மணி அகாலிதள்-3 அஸ்ஸாம் கன பரிசத்-1, போடோ மக்கள் முன்ன ணி-1 , இந்திய குடியரசு கட்சி (அதாலே)-1 , சிக்கிம் டெமாக்ரடிக் ப்ரண்ட்-1 நாகா பீப்பிள் ப்ரண்ட்-1, சுயேச்சைகள்-4 நியமன உறுப்பினர்கள்-3 என்று
மொத்தமாக 112 உறுப்பினர்கள் பிஜேபி கூட்டணியில் இருக்கிறார்கள்.


ராஜ்யசபா வில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 245 ஆகும். இதில் 233 பேர் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற எம்எல்ஏ க்கள் மூலமாக தேரந்தெடுக்க
ப்படுகிறார்கள். ஏனைய 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகிறார்கள்.எனவே மொத்தம் உள்ள 245 உறுப்பினர்களில் 123 உறுப்பினர்கள் பிஜேபி கூட்டணியில் இருந்து விட்டால் பிஜேபி கூட்டணி க்கு ராஜ்யசபாவிலும் மெஜாரிட்டி கிடைத்து விடும்.


இப்பொழுது பிஜேபி கூட்டணிக்கு ராஜ்யசபாவில் 112 எம்பிக்கள் இருப்பதால் இன்னும் 11 எம்பிக்க ள் கிடைத்து விட்டால் மெஜாரிட்டி கிடைத்து விடும் என்பதால் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா
என்றால் இருக்கிறது என்றே நினைக்க தோன்றுகிறது.


அடுத்த மாதத்தில் தமிழ்நாடு-6 ஒடிசா-4 குஜரா த்-2 பீகார்-2 என்று மொத்தமாக 14 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் அதிமுக-3 பிஜேபி-1 திமுக -2 அடுத்து ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம்-3 , பிஜேபி-1 குஜராத்தில் பிஜேபி-2 , பீகாரில் 1 , பிஜேபி கூட்டணியில் உள்ள ராம்விலாஸ் பஸ்வான் இன்னொன்று ஆனால் இது பிஜேபிக்கா இல்லை கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்திற்க்கா என்று தெரியவில்லை.


எதுவாக இருந்தாலும் பிஜேபி-5 அதிமுக-3 லோக்
ஜனசக்தி-1 என்று 9 இடங்கள் பிஜேபி கூட்டணி க்கு கிடைத்து விடும். ஒடிசாவில் பிஜேபி வேட் பாளருக்கு நவீன் பட்நாயக் ஆதரவு அளிப்பதால் அவரும் பிஜேபி கூட்டணி என்று கணக்கில் வைத்துக்
கொண்டால் பிஜேபி கூட்டணி க்கு அடுத்த மாத மே 12 எம்பிக்கள் வர இருப்பதால் ராஜ்யசபாவில் பிஜேபிக்கு மெஜாரிட்டி கிடைத்து விடுகிறது.


இது போக பிஜூ ஜனதா தளத்திற்கு ஏற்கனவே 5 எம்பிக்கள் இருக்கிறார்கள். இவர்களோடு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சியின் 2 எம்பிக்களும் சேர்ந்து விட்டால் பிஜேபி கூட்டணி யின் பலம் 130 ஐ எட்டி விடும். ஆனால் பிஜேபி தனியாகவே ராஜ்யசபாவில்
மெஜாரிட்டி பெற வேண்டும். அதாவது 130 எம்பிக்களும் பிஜேபியில் இருந்தே பெறப்பட்டிருக்க வேண்டும்.


இதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசத்தை அடுத்து அமித்ஷாவின் அடுத்த இலக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்
13 எம்பிக்களும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் 6 எம்பிக்களும் தான். இவர்களை இழுக்கவும் வலுவான வேலைகள் நடைபெற்று வருகிறது.


அதோடு அடுத்த வருடம் மட்டும் 75 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவதால் அதில் குறைந்து 30 எம்பிக்களை பிஜேபி பெற்று விடமுடியும் என்பதால் அடுத்த வருடத்தில இருந்து ராஜ்யசபா வில் பிஜேபியின் ராஜ்ஜியம் தான்.அதற்கான ட்ரைலர் அடுத்த மாதத்தில் வெளிவர
இருக்கிறது. இவ்வாறு பாஜகவுக்கு உள்ள சாதக அம்சங்கள் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


source: partiyal info from india today: May 24, 2019


follow speculation.



Date State Number of seats falling vacant Currently occupied by Likely to go to Gain for NDA
June 2019 Assam 2 Congress BJP and AGP 2
July 2019 Tamil Nadu 6 AIADMK 4, DMK 1, CPI 1 AIADMK 4, DMK 2 No change
April 2020 Maharashtra 7 BJP 1, NCP 2, Shiv Sena 1, Congress 1, RPA 1, Independent 1 Will depend on assembly polls
West Bengal 5 TMC 4, Independent 1 TMC will retain its seats No change
Odisha 4 BJD 3, Congress 1 BJP may win 1 1
Tamil Nadu 6 AIDMK 4, DMK 1, Left 1 Status quo No change
Assam 3 Congress 2, BPF 1 NDA will win all 3 3
Rajasthan 3 BJP 3 May lose 2 -2
Gujarat 4 BJP 3 Congress 1 May remain the same No change
Jharkhand 2 RJD 1, Independent 1 Will gain both 2
Bihar 5 JDU 3 BJP 2 May not be able to retain all -2
Madhya Pradesh 3 BJP 2, Congress 1 May lose 1 -1
Chhattisgarh 2 BJP 1 Congress 1 May lose 1 -1
Haryana 2 Congress 1, INLD 1 Will depend on Assembly polls 2019
Andhra Pradesh 4 TDP 1, Congress 2, TRS 1 Unlikely to gain any seat No change
Telangana 2 Congress 1, TDP 1 Both will go to TRS No change
Manipur 1 BJP 1 Will retain No change
Meghalaya 1 Congress Uncertain No change
Himachal Pradesh 1 Congress Will gain 1
June 2020 Karnataka 4 Congress 2, BJP 1, JD-S 1 Likely to retain or may gain, depends on political equation 1
Arunachal Pradesh 1 Congress NDA 1
July 2020 Mizoram 1 Congress MNF 1
November 2020 Uttar Pradesh 10 SP 6, BJP 1, BSP 2, Congress 1 BJP can get at least 9 9
Uttarakhand 1 Congress Will go to BJP 1
February 21 Jammu and Kashmir 4 PDP 2, BJP 1 Congress 1 Will depend on Assembly polls
April 21 Kerala 3 Congress 1, IUML 1, Left 1 Left will gain <p class="MsoNormal" styl

Next Story
கதிர் தொகுப்பு
Trending News