Top
undefined
Begin typing your search above and press return to search.

நான் கிறிஸ்தவன் கிடையவே கிடையாது திருப்பதி கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒய்.வி.சுப்பாரெட்டி மனம் திறந்த பேட்டி !!

நான் கிறிஸ்தவன் கிடையவே கிடையாது திருப்பதி கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒய்.வி.சுப்பாரெட்டி மனம் திறந்த பேட்டி !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  23 Jun 2019 6:49 AM GMT



திருப்பதி எழுமலையான் கோவில் புதிய அறங்காவலர் குழுத் தலைவராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பா ரெட்டி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது தனது மதம் குறித்து சந்தேகம், வதந்தி கிளப்பியவர்களின் கேள்விகளுக்கு பதில் உரைத்தார்.


திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒய்.வி.சுப்பாரெட்டிக்கு, தேவஸ்தான செயல்
அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கருடாழ்வார் சன்னதி அருகே பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுப்பா ரெட்டிக்கு, கோவிலில் உள்ள அனைத்து இடங்களையும் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் காண்பித்தார். மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படும் நகைகள் வைக்கக்கூடிய இடம், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களை அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி சுற்றிப்பார்த்தார். சுப்பாரெட்டி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி தேவஸ்தான தலைவர் பொறுப்பு, கேபினட் அந்தஸ்து கொண்ட, செல்வாக்கு மிக்க பதவியாகும்.


நான் கிறிஸ்தவன் இல்லை..இந்துதான்


இந்த நிலையில் அவர் கிறிஸ்தவர் என பல்வேறு ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது, இது குறித்து சுப்பா ரெட்டி தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் கூறுகையில் :


நான் பிறவியிலேயே இந்து பக்தன், எனது தாய், தந்தையர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் இந்துக்கள்தான். எங்கள் குடும்பத்தில் இந்து மத சடங்கு, சம்பிரதாயங்களைத்தான் கடை பிடித்து வருகிறோம்.


ஒவ்வொரு ஆண்டும் நான் சபரிமலை சென்று வருகிறேன், மேலும் நான் சீரடி பாபாவின் பக்தன். அடிக்கடி சீரடி சென்று வருகிறேன். நான் ஜகனுக்கு தாய் மாமன்தான். எனது பெயர் அனைத்து ஆவணங்களிலும் எர்ரம் வேங்கட சுப்பா ரெட்டி என்றுதான் உள்ளது. என்னை போய் எப்படி கிறிஸ்தவர் என சந்தேகிக்க முடியும். என் பெயரையும், ஜகன் பெயரையும் கெடுக்கவே இவ்வாறு அவதூறு செய்து வருகிறார்கள் என்றார்.


இந்த நிலையில் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜகன் மோகன் ரெட்டியின் தாத்தா ஒய்.எஸ்.வேங்கட ரெட்டி தனது குடும்பத்துடன் மதம் மாறியது உண்மைதான் என்றும் ஆனால் ஜெகனின் தாயார் அதாவது சுப்பா ரெட்டியின் தங்கையை முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு திருமணம் செய்து வைத்தபோது அவர் இந்து பெண்தான், ஆனால் திருமணமானதும், அவர் கணவர் குடும்பத்துக்கேற்ப தன்னை கிறிஸ்தவராக மாற்றிக் கொண்டார் என்றும் எனவும் நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே கூகுள் தகவல்களில் வேண்டுமென்றே விஷமிகள் சிலர் திட்டமிட்டு சுப்பா ரெட்டி குறித்த தகவல்களை மாற்றியதாகவும், இதனால்தான் இது போன்ற புரளிகள் பரவியதாகவும் கூறினர். 


Source : https://english.sakshi.com/andhrapradesh/2019/06/15/is-yv-subba-reddy-really-a-christian-find-out-the-truth


Next Story