Top
undefined
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் அடுத்தடுத்து கொலை: ஆர்பாட்டம் செய்த தொண்டர்கள் மீது மம்தா அரசு துப்பாக்கி சூடு: பல இடங்களில் 144 தடை உத்தரவு !!

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் அடுத்தடுத்து கொலை: ஆர்பாட்டம் செய்த தொண்டர்கள் மீது மம்தா அரசு துப்பாக்கி சூடு: பல இடங்களில் 144 தடை உத்தரவு !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  23 Jun 2019 6:18 AM GMT



மேற்கு வங்கத்தின் பாங்குரா பகுதியில் பாஜகவினர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் ஆர்பாட்டம் செய்த தொண்டர்கள் மீது மம்தா அரசு துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து பல இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலை அடுத்து, பா.ஜ.க மற்றும் திரிணமுல் காங்., கட்சி தொண்டர்களிடையே மோதல் வலுத்து வரும்நிலையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக பா.ஜ.க தொண்டர்கள் குற்றம்சாட்டினர். சமீபத்தில் நடைபெற்ற படு கொலைகளை கண்டித்து நடை பெற்ற ஆர்பாட்டத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டதால் போலீசாரால் தாங்கள் சுடப்பட்டதாக பாஜக தொண்டர்கள் புகார் கூறுகின்றனர்.


தொடர்ந்து பட்பாரா பகுதியில் காயமடைந்தவர்களை சந்தித்து உண்மை அறியும் குழு நலம் விசாரித்தது. 2 பாஜக தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை ஆய்வு செய்து திரும்பிய நிலையில் மீண்டும் அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. அப்பகுதியில் 144 தடையுத்தரவு அமலில் இருந்த போதும், கையெறி குண்டுகளை வீசி இரு கட்சியினரும் மோதிக் கொண்டதாகவும், வன்முறையாளர்களை விரட்டி அடிக்க துப்பாக்கி சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.


பாஜக தொண்டர்கள் தொடர்ந்து மம்தா கட்சியின் குண்டர்களால் கொல்லப்பட்டு வரும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் ஒரு பாஜக வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். கடந்த 3 வாரங்களில் ஒரு பெண் பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் நிலைமை அங்கு மோசமாக உள்ளது.


Next Story