Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரேநாளில் ரூ.1.25 கோடி விரயம்! இதுதான் குமாரசாமியின் கிராம தரிசன நாடகம்!!

ஒரேநாளில் ரூ.1.25 கோடி விரயம்! இதுதான் குமாரசாமியின் கிராம தரிசன நாடகம்!!

ஒரேநாளில் ரூ.1.25 கோடி விரயம்! இதுதான் குமாரசாமியின் கிராம தரிசன நாடகம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2019 12:55 PM GMT



கிராம தரிசன நிகழ்ச்சி (மக்கள் குறைதீர் முகாம்) என்ற நாடகத்தை கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த வாரம் தொடங்கினார். இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டதாக சொல்லப்பட்டது.


இதில் வேடிக்கை என்னவென்றால், அரசுப் பேருந்தில்தான் குமாரசாமி சண்டரகி கிராமத்து வந்தார். அரசுப் பள்ளியில்தான் தங்கினார். பாயில்தான் படுத்தார். ஆனாலும், கிராம தரிசனத்துக்கு ஆன செலவு ரூ.1 கோடி என்று பில் போட்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவும் குமாரசாமிக்காக செலவிடப்பட்ட தொகையில்லையாம். அவரைப் பார்க்க வந்த பொதுமக்களின் வசதிக்காக செலவு செய்யப்பட்டதாம்.





அதாவது ரூ.25 லட்சம், யாத்கிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தர்கி பகுதிக்கு வந்த பொதுமக்களின் வசதிக்காக செலவிடப்பட்டுள்ளதாம். ரூ.25 லட்சம் பொதுமக்களுக்கான தற்காலிக அலுவலகம் அமைக்கவும், மனுக்களைப் பெற மையங்கள் அமைக்கவும் செலவிடப்பட்டுள்ளதாம்.


பொதுமக்கள் 25 ஆயிரம் பேருக்கு சமையல் செய்து வழங்க ரூ.15 ஆயிரம்தான் செலவாகியுள்ளது. ஆனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகளுக்கு இரவு உணவு, காலை உணவு போன்றவற்றுக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவாகியுள்ளது. மேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.50 லட்சம் செலவானதாகவும் கணக்கு எழுதப்பட்டுள்ளது.


கிராம தரிசனம் நிகழ்ச்சி குறித்து குமாரசாமி முன்பு தெரிவித்தபோது, தனக்காக எந்த பெரிய வசதிகளும் கிராமத்தில் செய்யப்படாது என்று கூறினார். ஆனால் நடந்தது வேறாக உள்ளது என்பதே உண்மை.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News