Top
undefined
Begin typing your search above and press return to search.

அரசு நில அபகரிப்பு வழக்கு : நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வாங்கிய தி.மு.க முன்னாள் மேயர்

அரசு நில அபகரிப்பு வழக்கு : நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வாங்கிய தி.மு.க முன்னாள் மேயர்

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  26 Jun 2019 6:24 PM GMT


சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.பார்த்திபன் என்பவர், கடந்த மே மாதம் அளித்த புகாரில், கிண்டியில் உள்ள அரசு நிலத்தை தி.மு.க முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அபகரித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியம், காஞ்சனா உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி, முன்னாள் மேயரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியமும் அவரது மனைவி காஞ்சனாவும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.




https://twitter.com/TOIChennai/status/1143682934773207040?s=19


இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மா.சுப்பிரமணியம், மனைவி அகிய இருவரும் தேவைப்படும்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சம்பந்தப்பட்ட சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தலா ₹10 ஆயிரத்துக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதேபோல் வழக்கு விசாரணைக்கு இடையூறு செய்யவோ, சாட்சிகளை கலைக்கவோ கூடாது. தலைமறைவாககூடாது என்ற நிபந்தைனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Next Story