Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி, பா.ஜ.க-வில் இணைந்தார்! பிரதமர் மோடியை பாராட்டியதற்காக நீக்கப்பட்டவர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Jun 2019 12:18 PM GMT

பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்த கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி இன்று பாஜகவில் இணைந்தார்.

கேரளாவின் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி(52). இவர் கடந்த 2009 - ஆம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போது, 2 முறை எம்.பி.யாக இருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார்.

கடந்த மாதம் 28 - ஆம் தேதி அப்துல்லா குட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் எழுதியிருந்தார். பிரதமர் மோடி தலைமையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டி எழுதினார். இதனால் அப்துல்லா குட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த சூழலில் டெல்லிக்கு சென்ற அப்துல்லா குட்டி, நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார்.

இதைத்தொடர்ந்து அப்துல்லா குட்டி இன்று பாஜகவில் முறைப்படி இணைந்தார். டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News