Kathir News
Begin typing your search above and press return to search.

மழை வேண்டி கோயில்களில் யாகம்! கொட்டி தீர்க்கும் மழை!மக்கள் மகிழ்ச்சி!

மழை வேண்டி கோயில்களில் யாகம்! கொட்டி தீர்க்கும் மழை!மக்கள் மகிழ்ச்சி!

மழை வேண்டி கோயில்களில் யாகம்! கொட்டி தீர்க்கும் மழை!மக்கள் மகிழ்ச்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Jun 2019 1:51 PM GMT



சென்னை உள்பட தமிழகமெங்கும் குடிநீர் இன்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மற்ற உபயோகங்களுக்கும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இதன் ஒருபகுதியாக மழை வேண்டி அனைத்து அமைச்சர்களும் அந்தந்த மாவட்டங்களில் யாகம் வளர்த்து பூஜை செய்தனர். தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.






இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.






மாலையில் சென்னை அசோக்நகர், தி.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், பல்லாவரம், தாம்பரம்,பெருங்களத்தூர், வண்டலூர்,கூடுவாஞ்ச்சேரி, ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், திருநின்றவூர் உள்பட பரவலாக சென்னை முழுவதும் கனமழை பெய்தது.






திருவள்ளூர், திருத்தணி, பெரியகுப்பம், மணவாளநகர், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் திருக்கோவிலூர், அகண்டநல்லூர், முகையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.


மாலை 6 மணி அளவில் தொடங்கிய மழை 7 மணிவரை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தீடீரென கனமழையைப் பார்த்ததும் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் மழையில் நனைந்து ஆனந்தம் அடைந்தனர். அவர்கள், வர்ண பகவானுக்கு நன்றி தெரிவித்தனர்.


மழை வேண்டி யாகம் நடத்தியதை கேலி செய்த திக வீரமணி கும்பல்களின் மூக்கு மீண்டும் ஒருமுறை உடைபட்டுள்ளது. அவர்கள் எங்கே சென்று தலைமறைவானார்கள் என்று தெரியவில்லை.


குடம் இங்கே, தண்ணீர் எங்கே? என்று கேட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.


மழை இங்கே, தண்ணீரை தேக்கி வைக்க குளங்கள் எங்கே? என்று ஸ்டாலினிடம் கேட்கின்றனர் சென்னை மக்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News