Top
undefined
Begin typing your search above and press return to search.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சிறப்பு வருகையின் முக்கிய அம்சங்கள் இதுதான்!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சிறப்பு வருகையின் முக்கிய அம்சங்கள் இதுதான்!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  26 Jun 2019 7:16 AM GMT


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார்.தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


இந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாதம், எச்1பி விசா, வர்த்தகம், ரஷ்யாவுடனான ஆயுத ஒப்பந்தம், இரானில் இருந்து எண்ணை கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின், மாபெரும் வெற்றிக்கு பிறகு மைக் பாம்பியோவின் வருகையே, வெளிநாடுகளில் இருந்து வரும் முதல் வருகையாகும்.


ஜப்பானின், ‘ஜி20’ மாநாடு 28, 29ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கவுள்ளார். மோடி – டிரம்ப் சந்திப்புக்கு முன்பு , அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மைக் பாம்பியோ இந்தியா வந்துள்ளார்.


இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மைக் பாம்பியோ உடனான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது. இதில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிச்சயம் விவாதிப்போம் என்றார்.


இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது என்பது இயற்கையானது தான். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் விருப்பம் கொண்டுள்ளன. தொடர்ந்து, நாங்கள் நேர்மறையான அணுகுமுறையுடன் கலந்துரையாடுவோம் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, இன்று பிற்பகல் மைக் பாம்பியோவுக்கு, ஜெய்சங்கர் மதிய விருந்தளிக்க உள்ளார்.


இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. சில பொருட்களுக்கான இறக்குமதி வரியை, இரு நாடுகளும் உயர்த்தியுள்ளன. சிறப்பு பொருளாதார அந்தஸ்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் திடீரென விலக்கி கொண்டது,தவறான நடவடிக்கை. பாதுகாப்பு துறையில், இந்தியா மிகவும் சிறந்த கூட்டாளியாக உள்ளது. இரு தரப்பு உறவின்போது, நமது கூட்டாளிக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என பாம்பியோவுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.


Next Story