Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜி.எஸ்.டி. சிக்கலா.? யார் சொன்னது.? இதோ வந்தாச்சு பாருங்க - இனி எல்லோர் கையிலும்.!

ஜி.எஸ்.டி. சிக்கலா.? யார் சொன்னது.? இதோ வந்தாச்சு பாருங்க - இனி எல்லோர் கையிலும்.!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  28 Jun 2019 11:51 AM GMT


ஜி.எஸ்.டி. வரியின் விதிகளில் உள்ள குழப்பத்தை தீர்த்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் "அட்வெஞ்சர்ஸ் ஆப் தி ஜி.எஸ்.டி. மேன்" என்ற காமிக் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கடந்த 2016-ம்ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.


இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறியது. மேலும் பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.


அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் ஆனாலும் ஜி.எஸ்.டி. வரி குறித்து மக்களிடையே உள்ள குழப்பம் குறைந்தபாடில்லை.


இந்நிலையில், ஜி.எஸ்.டி. விதிகளில் உள்ள குழப்பத்தை தீர்க்கும் வகையில் "அட்வெஞ்சர்ஸ் ஆப் தி ஜி.எஸ்.டி. மேன்" என்ற காமிக் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை ஸ்ரீநிவாஸ் கோட்னி என்பவர் எழுதியுள்ளார்.


ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகள் மற்றும் விதிகளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், கேலிச்சித்திரங்கள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் இந்த புத்தகத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி குறித்த பல கருத்துக்கள் சுருக்கமாகவும் நகைச்சுவையாகவும் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


Next Story