Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லியில் நாளை பாஜக எம்பிக்கள் கூட்டம்: மோடி, அமித்ஷா எம்பிக்களுடன் முக்கிய பேச்சு !!

டெல்லியில் நாளை பாஜக எம்பிக்கள் கூட்டம்: மோடி, அமித்ஷா எம்பிக்களுடன் முக்கிய பேச்சு !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  1 July 2019 5:32 AM GMT


பாஜக எம்.பி-க்கள் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு பாஜக-விற்கு மக்களவையில் எம்.பி-க்கள் இப்போது உள்ளனர். இந்நிலையில், நாளை நடைபெறும் எம்.பி-க்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


தொகுதி வளர்ச்சி பணியிலும் , நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளிலும் எம்.பி-க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விவாதிப்பார்கள் என தெரிகிறது.


பாஜக தலைமையிலான அரசு அமைந்த பிறகு இப்போது முதல் கூட்டதொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்வது, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன.


இது தொடர்பாக பிரதமர் மோடி எம்.பி-க்கள் மத்தியில் பேசுவார் என தெரிகிறது. இருப்பினும்,கூட்டத்தில் விவாதிக்கப்படும் தகவல்கள் குறித்து பாஜக சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.


Next Story