Kathir News
Begin typing your search above and press return to search.

அப்படியே உல்டாவா போடுவோம்.. கிழிக்கப்பட்ட தமிழக மீடியாக்களின் முகத்திரை - ஆதாரத்தோடு அம்பலமான உண்மை.!

அப்படியே உல்டாவா போடுவோம்.. கிழிக்கப்பட்ட தமிழக மீடியாக்களின் முகத்திரை - ஆதாரத்தோடு அம்பலமான உண்மை.!

அப்படியே உல்டாவா போடுவோம்.. கிழிக்கப்பட்ட தமிழக மீடியாக்களின் முகத்திரை - ஆதாரத்தோடு அம்பலமான உண்மை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2019 4:22 AM GMT


பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளருமான சாலமன் பாப்பையாவின் புறநானூறு புதிய வரிசை வகை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகா் ரஜினிகாந்த், காலம் எப்பொழுதும் பேசாது, ஆனால் பதில் சொல்லும் என்று பேசியதாக சித்தரித்து ஒரு செய்தி பரவி வருவது தொடர்பில் சில உண்மைகள் வெளியாகியுள்ளது.


சென்னையில் நடைபெற்ற சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சா் பாண்டியராஜன், திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெங்கடேசன், நடிகா்கள் ரஜினிகாந்த், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


அப்போது ரஜினிகாந்த் பேசுகையில், சாலமன் பாப்பையா எழுதியுள்ள புறநானூறு புதிய வரிசை வகை நூல் இளைய தலைமுறையினா் படித்து பயனடைய வேண்டிய புத்தகம். புறநானூறு புதிய வரிசை நூல் எப்படியோ மக்களுக்கு சென்று சோ்ந்தால் நல்லது தான். ராமயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை. புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை என்றாா்.


நான் விழாவுக்கு வந்து பாா்வையாளனாக இருக்கிறேன் பேசவில்லை என்று கூறினேன். புத்தகத்தின் முன்னுரையை படித்தவுடன் இந்த புத்தகத்தை பற்றி பேசக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். சில புத்தகங்களை படிப்போம், சிலவற்றை எடுத்து கொடுத்துவிடுவோம். சில புத்தகத்தை படிக்க வேண்டும் என எடுத்து வைப்போம். அதுபோல இந்த புத்தகத்தையும் நான் எடுத்து வைத்துவிட்டேன்' என்று கூறினார்.


“சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புத்தகத்தை இளைய தலைமுறையிடம் அரசாங்கம் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன், இல்லையென்றால் காலம் இதை கொண்டு சேர்க்கும். காலம் எப்போதும் பேசாது, சரியான நேரத்தில் பதில் சொல்லும்.” என்று ரஜினி பேசியதை "காலம் எப்போதும் பேசாது. ஆனால், எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும்" என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு ரஜினி அர்த்தம் இல்லமால் பேசுவது போல செய்திகளையும், மீம்களையும் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளனர். அவர் பேசியோதோ வேறு, இவர்கள் எடுத்துக்கொண்ட அர்த்தமோ வேறு, இப்படித்தான் பல செய்திகள் அவர் அவர்களுக்கு ஏற்ப திரித்து தமிழ் மக்களை சதாகாலம் ஏமாற்றி வருகின்றனர்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News