Top
undefined
Begin typing your search above and press return to search.

சட்டசபையில் ஸ்டாலினை “வச்சி செய்த” அமைச்சர் செல்லூர் ராஜூ! குட்டி கதை மூலம் கதறவிட்டார் !!

சட்டசபையில் ஸ்டாலினை “வச்சி செய்த” அமைச்சர் செல்லூர் ராஜூ! குட்டி கதை மூலம் கதறவிட்டார் !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 July 2019 9:20 AM GMTகூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுர் ராஜு சட்டசபையில் குட்டி கதை ஒன்றைச் சொல்லி ஸ்டாலின் எந்தகாலத்திலும் முதல்வர் ஆக மாட்டார் என்று மறைமுகமாக கூற சபையே சிறிது நேரம் சிரிப்பலையில் மூழ்கியது. அவர் சொன்ன கதை இதுதான்: -


ஒரு அப்பா தன் மகளுக்கு வரன் பார்த்தார். எந்த ஜாதகமும் பெண்ணுக்கு பொருந்தவில்லை. இந்நிலையில் தரகர் ஒரு ஜாதகத்தை கொண்டு வந்தார். அந்த வரனில் 10-ல் எட்டு பொருத்தம் நன்றாக உள்ளது. எட்டு பொருத்தம் உள்ளதே, இதுவே நல்ல ஜாதகம்தான் என பெண்ணின் தந்தை முடிவு செய்தார். பெண்ணும் அந்த ஆண்மகனை மணக்கச் சம்மதித்தார். திருமண ஏற்பாடு களைகட்டிது. மணமேடையில் மணமக்கள் அமர்ந்துள்ளனர். புரோகிதர் மந்திரம் சொல்கிறார். யாக குண்டத்தில் போடுவதற்காக பொரியை மாப்பிள்ளையிடம் கொடுத்தார் புரோகிதர். பொரி சாப்பிடுவதற்கு கொடுக்கிறார் என நினைத்த மாப்பிள்ளை அதனை தன் வாயில் போட்டார்.


உடனே புரோகிதர் “அட அபிஷ்டு... அபிஷ்டு... பொரியை யாக குண்டத்தில் போட கொடுத்தால் வாயில் போட்டு மெல்லுகிறாயே” என்றார். சரி என அதனை ஏற்றுக்கொண்ட மாப்பிள்ளை, வாயில் போட்ட பொரியை யாக குண்டத்தில் துப்ப, உடனே கடிந்துகொண்டார் புரோகிதர்.


இறுதியகத் தாலியை எடுத்து கட்டச் சொல்லி மாப்பிள்ளையிடம் கொடுத்தார். உடனே மாப்பிள்ளை “நான் எது செய்தாலும் நீங்கள் தவறு என்கிறீர்கள். ஆகவே தாலியை நீங்களே கட்டிவிடுங்கள்” எனக் கூற மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது.


பெண்ணின் தந்தையிடம் வந்த தரகர், மாப்பிள்ளைக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை. இவைதான் குறைபட்ட இந்த இரு பொருத்தங்கள் என்றார். உடனே பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார்.


இந்த கதையை கூறி முடித்த செல்லூர் ராஜு, “இந்த கதையில் வரும் மாப்பிள்ளை போலத்தான் சிலருக்கு மணமேடை வாய்க்கும், மண பொருத்தம் வாய்க்கும், ஆனால் திருமணம் ஆகாது” என மறைமுகமாக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது என்பதை கதை மூலம் சொல்லி முடித்தார்.


செல்லூர் ராஜூ கதை சொல்லி முடித்ததும் அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. அதிமுக எம்எல்ஏக்கள், மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் அவரை பாராட்டினர்.


ஆனால், இந்த கதையை கேட்டதும் ஸ்டாலின் முகம் செத்து போய்விட்டது. திமுக எம்எல்ஏக்கள் கோபத்தில் வழக்கம்போல கூச்சலிட்டனர்.


அமைச்சர் செல்லூர் ராஜூவை, திமுகவினர் தெர்மக்கோல் விஞ்ஞானி என்று இதுவரை கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அந்த செல்லூர் ராஜூ, திமுக தலைவர் ஸ்டாலினையே வச்சி செய்துவிட்டார். அவர் ஹீரோ ஆகிவிட்டார். ஸ்டாலின் ஜீரோ ஆகிவிட்டார்.


இருந்தாலும் “கவிழ்ந்து விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற ரீதியில், “திருமணத்தில் 10 பொருத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மாப்பிள்ளை செத்துவிடுவான்” என்று சமாளிக்க முயன்றார் துரைமுருகன். அவரது மூக்கை உடைக்கும் விதமாக “எப்படியும் உங்கள் கட்சி ஜாகத்தை நம்ப போவதில்லை. பிறகு ஏன் அதுகுறித்து பேசுகிறீர்கள்?” என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


“ஜாதகம் எங்கள்ளுக்குப் பார்க்கவில்லை, உங்களுக்குத்தான் பார்க்கிறோம்” என்று துரைமுருகன் மறுபடியும் அதிமேதாவியாக நினைத்து பேச, “எங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். உங்களைப்போல் மேலேயும் இல்லாமல், கீழேயும் இல்லாமல் நடுவில் தொங்கிக்கொண்டு இருக்கவில்லை” என்று உடனடியாக பழனிச்சாமி முகத்தில் அறைந்தாற்போல் பதில் சொல்ல ஸ்டாலின், துரைமுருகன் உள்பட திமுக எம்எல்ஏக்களின் முகம் செத்தே போய்விட்டது.
அப்போது மாடத்தில் இருந்த பத்திரிகையாளர்களில் ஒருவர், “இதுதான் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொள்வது” என்றார். மற்றொருவர், ”இல்லை புரோ, “இதுதான் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது” என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் சிரித்தனர்.


இதுபோல, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஸ்டாலின் கையொழுத்திட்ட போட்போவையும் செய்தியையும் சட்டசபையில் வெளியிட்டு ஸ்டாலினை அலற விட்டார் அமைச்சர் சிவி சண்முகம்.


மொத்தத்தில், திமுகவினர்தான் அறிவாளிகள் என்பதுபோலவும், அதிமுகவினர் காமெடியன்கள் போலவும் மக்களிடம் தொடர்ந்து பரப்பிவந்த ஸ்டாலினின் முகத்திரையை கிழிக்கும் படலத்தை தொடங்கிவிட்டனர் அதிமுகவினர். 


Next Story