Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த பேச்சு: கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் !!

தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த பேச்சு: கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  4 July 2019 1:23 PM GMT


தமிழக தண்ணீர் பிரச்சனை குறித்த தனது கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழக தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு குறித்தும் தமிழக மக்கள் குறித்தும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுகஉட்பட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டபோது, தனது கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களை தாம் மதிப்பதாக கிரண்பேடி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.


Next Story