Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் பதவிக்கு வர முடியாத அதிர்ச்சியில்தான் ராகுல் காந்தியின் இந்த ராஜினாமா சீன்!! பாஜக பிரமுகர்கள் உட்பட பலரும் கருத்து !!

பிரதமர் பதவிக்கு வர முடியாத அதிர்ச்சியில்தான் ராகுல் காந்தியின் இந்த ராஜினாமா சீன்!! பாஜக பிரமுகர்கள் உட்பட பலரும் கருத்து !!

பிரதமர் பதவிக்கு வர முடியாத அதிர்ச்சியில்தான் ராகுல் காந்தியின் இந்த ராஜினாமா சீன்!! பாஜக பிரமுகர்கள் உட்பட பலரும் கருத்து !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2019 9:40 AM GMT



அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி தனக்கு குடும்ப வாரிசு அரசியல் அடிப்படையில் சுலபமாக கிடைத்ததை போன்றே பிரதமர் பதவியும் தனக்கு கிடைக்கும் என ராகுல் காந்தி நினைத்தார். அதற்கான வெற்றிடம் ஓன்று இருப்பதாகவும் நினைத்து பொய், போலிதனமான பிரச்சாரங்களில் எல்லாம் ஈடுபட்டார்.


ஆனால் நாட்டில் பெரும்பாலான மக்கள் இவரை ஏற்றுக் கொள்ளாத நிலையில் ராகுல் படுதோல்வி அடைந்தார். இந்த நிலையில் கட்சிக்காரர்கள் சரியாக வேலை செய்யாததால்தான் தான் தோற்றதாக குறிப்பிட்ட ராகுல் கட்சிக்காரர்களை மிரட்டும் வகையில் அதை ராஜினாமா செய்யப்போவதாக கூறி கடைசியில் செய்து விட்டார் என கூறுகிறார்கள்.


உண்மையில் அவருக்கு கட்சி வளர்ச்சி மேல் நல்லெண்ணம் இருந்தால் நல்ல இளைஞராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஜனநாயக முறையில் கட்சி தேர்தலை நடத்த முன்வந்து இருக்கலாம் . ஆனால் அவ்வாறு அவர் செய்யாமல் 90 வயதானவரை அடையாளம் காட்டியது ராகுலின் சுயநலம்தான் என்றும் அவர் நாடகமாடுவதாகவே கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர்.


அப்போது அவர் கூறுகையில் பழமையான காங்கிரஸ் கட்சியின் புதிய ‘சீன்’ இது என்றும், இதில் தாங்கள் சொல்வதற்கு ஒன்று இல்லை என்றும் தெரிவித்தார்.


ராகுல் காந்தி பதவி விலகியது பற்றி, அமேதி தொகுதியில் அவரை தோற்கடித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கருத்து கேட்ட போது, “ஜெய்ஸ்ரீ ராம்” என்று மட்டும் கூறினார்.


பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் நளின் கோக்லி கூறுகையில், காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சி என்றும், தங்கள் கட்சி ஜனநாயக ரீதியில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News