Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் இன்று பா.ஜ.க,உறுப்பினர் சேர்ப்பு முகாம்!! ஒரே நாளில் ஒரு கோடி பேர் சேர்ந்தனர் !!

நாடு முழுவதும் இன்று பா.ஜ.க,உறுப்பினர் சேர்ப்பு முகாம்!! ஒரே நாளில்  ஒரு கோடி பேர் சேர்ந்தனர் !!

Pranesh RanganBy : Pranesh Rangan

  |  6 July 2019 12:52 PM GMT



நாடு முழுவதும் இன்று பா.ஜ.க,உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடக்கிறது. பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா சென்றார்.


பா.ஜ.க,நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு பணி நடக்கிறது. இந்நாளையொட்டி வாரணாசி சென்ற பிரதமர் மோடி இன்று (6ம் தேதி) லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்றைய உறுப்பினர் சேர்ப்பு மூலம் பல மக்களை இணைத்து பா.ஜ., குடும்பத்தை வலுவடைய செய்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


உறுப்பினர் சேர்ப்பு முகாம் நிகழ்ச்சியில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆமதாபாத்திலும், சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின்கட்காரி நாக்கபூரிலும், முக்தார் அப்பாஸ் நக்வி மகாராஷ்டிராவிலும், பங்கேற்கின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் உடனடி ஆன்லைன் பதிவு மூலம் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமானோர் சேர்க்கப்பப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


Next Story